பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுப்பாதையில் விபத்து அபாயம்: பலி வாங்க காத்திருக்கும் பள்ளங்கள்

Added : ஜூலை 26, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி - பாலக்காடு ரோடுக்கான மாற்றுப்பாதையில், சீரமைக்காமல் விடப்பட்டுள்ள பள்ளங்கள், மழைக்காலத்தில் வாகனங்களை வீழ்த்தி வருகின்றன.பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில், ரயில்வே மேம்பால பணிகள் நடக்கும் நிலையில், கிருஷ்ணா குளம் - ஜமீன் ஊத்துக்குளி - மீன்கரை ரோடு - மார்கெட் ரோடு வழித்தடம் மாற்றுப்பாதையாக பயன்படுத்தப்படுகிறது.இந்நிலையில், இந்த வழித்தடத்தில்
 மாற்றுப்பாதையில் விபத்து அபாயம்: பலி வாங்க காத்திருக்கும் பள்ளங்கள்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி - பாலக்காடு ரோடுக்கான மாற்றுப்பாதையில், சீரமைக்காமல் விடப்பட்டுள்ள பள்ளங்கள், மழைக்காலத்தில் வாகனங்களை வீழ்த்தி வருகின்றன.பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில், ரயில்வே மேம்பால பணிகள் நடக்கும் நிலையில், கிருஷ்ணா குளம் - ஜமீன் ஊத்துக்குளி - மீன்கரை ரோடு - மார்கெட் ரோடு வழித்தடம் மாற்றுப்பாதையாக பயன்படுத்தப்படுகிறது.இந்நிலையில், இந்த வழித்தடத்தில் சீரமைக்காமல் விடப்பட்டுள்ள குழிகள் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி, வாகன ஓட்டுனர்களை வீழ்த்தி விபத்துள்ளாக்கி வருகின்றன.குறிப்பாக, ரோடு திருப்பத்தில், எதிர்பாராத பள்ளங்கள், வாகனங்களுக்கு ஆபத்தானவையாக மாறியுள்ளன. அதிலும், கிருஷ்ணா குளத்தை அடுத்துள்ள டாஸ்மாக் கடை அருகிலுள்ள ரோடு திருப்பம் மற்றும் ஜமீன் ஊத்துக்குளி வி.ஏ.ஓ., அலுவலகம் அருகிலுள்ள திருப்பம் ஆகிய ஆபத்தான இடங்களில், ரோடு நன்றாக இருந்தாலே விபத்து வாய்ப்பு அதிகம்.அந்த பகுதிகளில் சீரமைக்காமல் விட்டுள்ள பள்ளங்கள், ஆபத்தை அதிகரிக்கின்றன. இந்த வழித்தடத்தில் மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்படுவதால், ரோடு நெடுஞ்சாலை துறை வசம் இருந்து, துறையின் திட்டங்கள் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதனால், சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் உள்ளது. புறவழிச்சாலை அமைத்து முடிக்க ஓராண்டுக்கு மேலாகும். அது வரை ரோட்டை சீரமைக்காமல் வைத்திருந்தால், மக்களின் நிலை என்னவாகும் என்பதை அதிகாரிகள் சிந்திக்க வேண்டும்.எனவே, துறை மேலிடத்தில் சிறப்பு அனுமதி பெற்று, ரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளங்களுக்கு 'பேட்ச் ஒர்க்' பணிகளாவது செய்து, மக்களை விபத்தில் இருந்து பாதுகாக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X