சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

ஆட்டம் காட்ட வேண்டிய நேரம்!

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 26, 2021
Share
Advertisement
'இன்னும் ஏழு மாதங்கள் உள்ளன; அதற்குள் இவ்வளவு அவசரப்படுகின்றனரே...' என, கவலையில் ஆழ்ந்துள்ளார், கோவா முதல்வரும், பாஜ., மூத்த தலைவருமான பிரமோத் சாவந்த். 'ராணுவ கட்டுப்பாட்டுடன் செயல்படும் கட்சி' என கூறப் படும் பா.ஜ., விலும், சமீப காலமாக கோஷ்டி பூசல்கள் அதிகரித்துள்ளன.கர்நாடகா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். இந்த கூத்து, தற்போது கோவாவிலும்
 அக்கம் பக்கம்



'இன்னும் ஏழு மாதங்கள் உள்ளன; அதற்குள் இவ்வளவு அவசரப்படுகின்றனரே...' என, கவலையில் ஆழ்ந்துள்ளார், கோவா முதல்வரும், பாஜ., மூத்த தலைவருமான பிரமோத் சாவந்த். 'ராணுவ கட்டுப்பாட்டுடன் செயல்படும் கட்சி' என கூறப் படும் பா.ஜ., விலும், சமீப காலமாக கோஷ்டி பூசல்கள் அதிகரித்துள்ளன.கர்நாடகா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். இந்த கூத்து, தற்போது கோவாவிலும் அரங்கேறிஉள்ளது.

இங்கு அடுத்த ஏழு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கஉள்ளது. அதில் தற்போதைய முதல்வர் பிரமோத் சாவந்தை ஓரம் கட்டி, முதல்வர் பதவியை பறிக்க, ஒரு கோஷ்டியே தயாராகி வருகிறது.இதில் முன்னணியில் இருப்பவர், தற்போதைய மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக். இவர், சமீப காலமாகவே முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறார். இதற்காக டில்லியில் முகாமிட்டு மூத்த தலைவர்களுடன் பேசி, தனக்கு ஆதரவு திரட்டுகிறார்.

மற்றொரு பக்கம், கோவா மாநில சுகாதார அமைச்சரான விஷ்வஜித் ரானேயும், முதல்வர் பதவிக்கு காய் நகர்த்தி வருகிறார்.'அடுத்த சட்டசபை தேர்தல் தேதி அறிவித்ததும், என்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்து விடுங்கள். கண்டிப்பாக மீண்டும் நம் கட்சியை ஆட்சியில் அமர்த்துவேன்' என, மேலிட தலைவர்களிடம் கூறுகிறார்.

இதையெல்லாம் வேடிக்கை பார்க்கும் பிரமோத் சாவந்த், 'என்னை ஒரு மனிதராகவே மதிக்கவில்லையா இவர்கள்; என் ஆட்டத்தை காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது' என ஆவேசப்படுகிறார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X