சுழல் விளக்குகளை யார் பயன்படுத்தலாம்?; பட்டியலில் விடுபட்ட முதல்வர் பெயர்!| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சுழல் விளக்குகளை யார் பயன்படுத்தலாம்?; பட்டியலில் விடுபட்ட முதல்வர் பெயர்!

Updated : ஜூலை 26, 2021 | Added : ஜூலை 26, 2021 | கருத்துகள் (1)
Share
கோல்கட்டா-மேற்கு வங்கத்தில் காரின் மேல் சிகப்பு அல்லது நீல நிற விளக்கு பயன்படுத்தும் தகுதி உடைய வி.ஐ.பி.,க்கள் பட்டியலில் கவர்னர், முதல்வர், சபாநாயகர், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.தடை விதிப்புஅவசரகால பணி அல்லது பேரிடர் மேலாண்மை பணிகளில்

கோல்கட்டா-மேற்கு வங்கத்தில் காரின் மேல் சிகப்பு அல்லது நீல நிற விளக்கு பயன்படுத்தும் தகுதி உடைய வி.ஐ.பி.,க்கள் பட்டியலில் கவர்னர், முதல்வர், சபாநாயகர், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை.



latest tamil news


மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.தடை விதிப்புஅவசரகால பணி அல்லது பேரிடர் மேலாண்மை பணிகளில் ஈடுபடுபவர்கள் தவிர மற்ற அனைத்து அரசு அதிகாரிகளும், தங்கள் காரின் மீது சுழலும் விளக்கு பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்தது.ஆனாலும் மேற்கு வங்கத்தில் கவர்னர், முதல்வர், சபாநாயகர் மற்றும் கோல்கட்டா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு மட்டும் சுழலும் விளக்கு பயன்படுத்த, மாநில அரசு அனுமதி அளித்தது.இந்நிலையில் மேற்கு வங்கத்தில் மூத்த அரசு அதிகாரி என்று கூறிக் கொண்டு சுழலும் விளக்கு பயன்படுத்தி வந்த போலி நபர்கள் பலர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து சுழலும் விளக்கு பயன்படுத்த தகுதி உடைய வி.ஐ.பி.,க்கள் பட்டியலை மாநில போக்குவரத்து துறை சமீபத்தில் வெளியிட்டது. அதன் விபரம்:அனைத்து அமைச்சர்கள், தலைமைச் செயலர், கூடுதல் தலைமை செயலர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள், முதன்மை செயலர் ஆகியோர் அவசரகால பணிகளில் ஈடுபடும் போது மட்டும் காரின் மேல் சுழல் விளக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது.மண்டல கமிஷனர்கள், டி.ஜி.பி.,க்கள், ஏ.டி.ஜி.பி.,க்கள், ஐ.ஜி.பி.,க்கள், தீயணைப்பு துறை இயக்குனர், சுங்க மற்றும் வணிக வரித்துறை கமிஷனர்கள், மாவட்ட கலெக்டர்கள் சுழல் விளக்கு பயன்படுத்தலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news


இந்த பட்டியலில் கவர்னர், முதல்வர், சபாநாயகர், கோல்கட்டா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பெயர்கள் இடம்பெறவில்லை.அதிகாரம்இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் பிர்ஹாத் ஹக்கீம் கூறுகையில், ''கவர்னர் உள்ளிட்ட நான்கு பேரும், வி.வி.ஐ.பி.,க்கள் பட்டியலில் இடம் பெறுகின்றனர். ''எனவே அவர்கள் சுழல் விளக்கு பயன்படுத்த எப்போதும் அதிகாரம் உள்ளது. இதனால் தான் அவர்களின் பெயர்கள் பட்டியலில் குறிப்பிடப்பட வில்லை,'' என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X