யாத்திரை தடையை மீறிய பக்தர்களால் பரபரப்பு| Dinamalar

யாத்திரை தடையை மீறிய பக்தர்களால் பரபரப்பு

Updated : ஜூலை 26, 2021 | Added : ஜூலை 26, 2021 | கருத்துகள் (7)
Share
புதுடில்லி- 'கான்வட் யாத்திரைக்கு உத்தரகண்ட் அரசு விதித்துள்ள தடையை மீறி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று ஹரித்வார் நகருக்குள் அதிரடியாக நுழைந்தனர்.உத்தர பிரதேசம், ஹரியானா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த சிவ பக்தர்கள் உத்தரகண்டின் ஹரித்வாருக்கு யாத்திரையாக சென்று, புனித கங்கை நீரை கலசங்களில் நிரப்பி தங்கள் ஊருக்கு எடுத்து வருவர்.பின் அங்குள்ள சிவன்

புதுடில்லி- 'கான்வட் யாத்திரைக்கு உத்தரகண்ட் அரசு விதித்துள்ள தடையை மீறி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று ஹரித்வார் நகருக்குள் அதிரடியாக நுழைந்தனர்.



latest tamil news



உத்தர பிரதேசம், ஹரியானா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த சிவ பக்தர்கள் உத்தரகண்டின் ஹரித்வாருக்கு யாத்திரையாக சென்று, புனித கங்கை நீரை கலசங்களில் நிரப்பி தங்கள் ஊருக்கு எடுத்து வருவர்.பின் அங்குள்ள சிவன் கோவில்களில் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்துவர். ஆண்டுதோறும் ஜூலையில் நடக்கும் இந்த யாத்திரை, கான்வட் யாத்திரை என அழைக்கப்படுகிறது.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக இந்த ஆண்டுக்கான கான்வட் யாத்திரையை ரத்து செய்யும்படி உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதை தொடர்ந்து, யாத்திரையை ரத்து செய்து உத்தரகண்ட் மற்றும் உ.பி., அரசுகள் சமீபத்தில் உத்தரவிட்டன.'உத்தரவை மீறி ஹரித்வாருக்குள் நுழையும் பக்தர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, நகர் முழுதும் போலீசார் சுவரொட்டிகளை ஒட்டினர்.ஹரித்வார் முழுதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 'மீறி நுழைபவர்கள் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்படுவர்' என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


latest tamil news



இந்நிலையில் கான்வட் யாத்திரையின் முதல் நாளான நேற்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தடையை மீறி ஹரித்வார் நகருக்குள் நுழைந்தனர்.எல்லையிலேயே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, திரும்பி செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனாலும் சிலர் தடையை மீறி கங்கையில் நீர் எடுத்து செல்ல நகருக்குள் நுழைந்தனர்.'கொரோனா தொற்றுக்கோ, தனிமைப்படுத்தலுக்கோ அஞ்ச மாட்டோம்' என பக்தர்கள் தெரிவித்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X