ஹிமாச்சல பிரதேசத்தில் நிலச்சரவில் சிக்கி 9 பேர் பலி

Updated : ஜூலை 26, 2021 | Added : ஜூலை 26, 2021
Share
Advertisement
கின்னாவூர்-ஹிமாச்சல பிரதேசத்தில் மலைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒன்பது பேர் பலியாகினர்.ஹிமாச்சல பிரதேசத்தில் முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்குள்ள சாங்லா மலைப்பிரதேசத்தில் நேற்று சுற்றுலா பயணியர் குவிந்திருந்தனர். அப்போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு மலைப்பகுதியில் இருந்து பெரிய பாறைகள் உருண்டு வந்தன.

கின்னாவூர்-ஹிமாச்சல பிரதேசத்தில் மலைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒன்பது பேர் பலியாகினர்.



latest tamil news



ஹிமாச்சல பிரதேசத்தில் முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்குள்ள சாங்லா மலைப்பிரதேசத்தில் நேற்று சுற்றுலா பயணியர் குவிந்திருந்தனர். அப்போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு மலைப்பகுதியில் இருந்து பெரிய பாறைகள் உருண்டு வந்தன. மேகமூட்டமாக இருந்ததால் கீழே பாலத்தில் நின்றிருந்த பயணியருக்கு தெரியவில்லை.


latest tamil news



பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீது பாறைகள் விழுந்தன. ஆற்றின் குறுக்காக கட்டப்பட்டிருந்த பாலம் இடிந்து விழுந்தது.இந்த விபத்தில் ஒன்பது பேர் அதே இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தனர். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய மூன்று பேரை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடும் அறிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X