பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: ஜாதி கணக்கெடுப்பு எதுக்கு?

Updated : ஜூலை 26, 2021 | Added : ஜூலை 26, 2021 | கருத்துகள் (46)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:ஆர்.கணேசன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:ஒரு காலத்தில் குலத்தொழில் தொன்று தொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வந்ததால், செய்யும் தொழிலை பொறுத்து ஜாதி பெயர் சூட்டப்பட்டது.திருமலை நாயக்கர் காலத்தில், சித்திரம் வரைவோர் குடியிருக்கும் பகுதியை, 'சித்திரக்கார தெரு' என்றும்,
ஜாதி, கணக்கெடுப்பு, எதுக்கு


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:



ஆர்.கணேசன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

ஒரு காலத்தில் குலத்தொழில் தொன்று தொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வந்ததால், செய்யும் தொழிலை பொறுத்து ஜாதி பெயர் சூட்டப்பட்டது.திருமலை நாயக்கர் காலத்தில், சித்திரம் வரைவோர் குடியிருக்கும் பகுதியை, 'சித்திரக்கார தெரு' என்றும், எழுத்தாணி செய்வோர் வசிக்கும் பகுதியை, 'எழுத்தாணிக்கார தெரு' என்றும் அழைக்கப்பட்டது.

அந்த பெயர்கள், மதுரையில் இன்றும் நிலைத்திருக்கின்றன.இதே போல பல தெருக்களை, தமிழகம் எங்கும் காணலாம்.மத்திய அரசு சமீபத்தில், 'மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது எஸ்.சி., -- எஸ்.டி., எனப்படும் பட்டியலின பிரிவினர் பற்றிய தகவல் மட்டுமே சேகரிக்கப்படும். ஜாதிவாரி கணக்கெடுப்பு இனி நடக்காது' என லோக்சபாவில் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஜாதியினரும் அதிக அளவு இடஒதுக்கீடு கேட்கும் சூழ்நிலை உருவாகும் என்பதால், அதை தவிர்க்கவே ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசு மறுத்துள்ளது. இந்த முடிவு வரவேற்கத்தக்கது. ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது நாட்டின் நலனுக்கு உகந்தது அல்ல. அது விபரீதத்தில் முடியலாம்.


latest tamil news


ஜாதி ரீதியாக மனிதனை பிரிப்பது, ஒதுக்குவது, அவமானப்படுத்துவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.ஜாதி மறுப்பு திருமணங்கள் இப்போது சர்வசாதாரணமாக நடக்கின்றன. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் ஆணவ படுகொலையையும் முற்றிலும் தடுக்க வேண்டும்.ஒவ்வொருவரையும் சக மனிதனாக நேசித்து, அன்பை மட்டுமே பரப்ப வேண்டும். ஜாதிரீதியிலான துாண்டுதலால், பல இளைஞர்களின் எதிர்காலம் கேள்வி குறியாகிவிட்டது. அவர்களை ஜாதி எனும் போதையில் இருந்து மீட்க வேண்டும்.தொழில்நுட்ப வளர்ச்சியால் நாம் எவ்வளவோ முன்னேறி விட்டோம். கல்வியால் நாகரிகம் வளர்ந்துள்ளது. ஜாதியை ஒழித்து, மனிதம் பாராட்டுவோம்!

Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatakrishnan - Mumbai,இந்தியா
27-ஜூலை-202101:29:20 IST Report Abuse
Venkatakrishnan நல்ல கட்டுரை... நல்லா உரைக்கட்டும்... ஜாதியின் பெயரைச் சொல்லி வெட்டிக் கூச்சலிடும் முட்டாள் மங்குணிகளுக்கும், இதை வைத்து அரசியல் லாபம் தேடும் சங்கிகளுக்கும்
Rate this:
Cancel
Kundalakesi - Coimbatore,இந்தியா
26-ஜூலை-202121:09:30 IST Report Abuse
Kundalakesi ஒழிக ஜாதி மதங்கள். மலரட்டும் மனிதநேயமும்தன்னம்பிக்கையையும்.
Rate this:
Cancel
LAX - Trichy,இந்தியா
26-ஜூலை-202119:20:40 IST Report Abuse
LAX சபாஷ் சரியான கருத்து..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X