நாளை டில்லி வருகிறார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நாளை டில்லி வருகிறார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

Updated : ஜூலை 26, 2021 | Added : ஜூலை 26, 2021 | கருத்துகள் (1)
Share
புதுடில்லி-அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளின்கென் இரண்டு நாள் பயணமாக, நாளை இரவு டில்லி வருகிறார்.ஆப்கானிஸ்தான் நிலவரம், பாக்.,கின் பயங்கரவாத ஆதரவு உள்ளிட்டவை குறித்து அவர் விவாதிக்க திட்டமிட்டுள்ளார்.அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இந்தாண்டு துவக்கத்தில் பதவியேற்றார். 'இந்தியா உடனான உறவை மேலும் வலுப்படுத்துவோம்' என, அவர் கூறிஉள்ளார்.இந்தாண்டு

புதுடில்லி-அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளின்கென் இரண்டு நாள் பயணமாக, நாளை இரவு டில்லி வருகிறார்.



latest tamil news



ஆப்கானிஸ்தான் நிலவரம், பாக்.,கின் பயங்கரவாத ஆதரவு உள்ளிட்டவை குறித்து அவர் விவாதிக்க திட்டமிட்டுள்ளார்.அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இந்தாண்டு துவக்கத்தில் பதவியேற்றார். 'இந்தியா உடனான உறவை மேலும் வலுப்படுத்துவோம்' என, அவர் கூறிஉள்ளார்.இந்தாண்டு மார்ச்சில் அமெரிக்க ராணுவ அமைச்சர் லாயிட் ஆஸ்டின், ஏப்.,ல் பருவ நிலை மாறுபாடுக்கான சிறப்பு துாதர் ஜான் கெர்ரி பயணம் மேற்கொண்டனர்.

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளின்கென் நாளை இரவு டில்லி வருகிறார். அதற்கடுத்த நாள் காலையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். பின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் ஆலோசனை நடத்த உள்ளார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோரை அவர் சந்திக்க உள்ளார்.

இந்த சந்திப்புகளின்போது இரு தரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பாக அவர் பேச உள்ளார்.ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விலக்கி கொள்ளப்படும் நிலையில், அதனால் ஏற்படும் பாதுகாப்பு பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க உள்ளார்.பயங்கரவாத அமைப்புகளுக்கு நம் அண்டை நாடான பாக்., தொடர்ந்து ஆதரவு அளித்து வருவது குறித்தும் அவர் விவாதிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.


latest tamil news



இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா அடங்கிய, 'குவாட்' அமைப்பின் வாயிலாக இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவர் ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், சர்வதேச விமானப் போக்குவரத்தை துவக்குவது தொடர்பாகவும் பேசப்படும் என, வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X