ராஜஸ்தான் அமைச்சரவை மாற்றம் எப்போது!| Dinamalar

ராஜஸ்தான் அமைச்சரவை மாற்றம் எப்போது!

Updated : ஜூலை 26, 2021 | Added : ஜூலை 26, 2021 | கருத்துகள் (1)
Share
ஜெய்ப்பூர்-பஞ்சாபை தொடர்ந்து ராஜஸ்தானில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில், காங்., ஈடுபட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. போர்க்கொடிராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்., அரசு அமைந்துள்ளது. உரிய அங்கீகாரம் கிடைக்காததால் அதிருப்தி அடைந்த இளம் தலைவர்
ராஜஸ்தான், அமைச்சரவை, மாற்றம், எப்போது

ஜெய்ப்பூர்-பஞ்சாபை தொடர்ந்து ராஜஸ்தானில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில், காங்., ஈடுபட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


போர்க்கொடி



ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்., அரசு அமைந்துள்ளது. உரிய அங்கீகாரம் கிடைக்காததால் அதிருப்தி அடைந்த இளம் தலைவர் சச்சின் பைலட், கடந்தாண்டு ஜூலையில் திடீரென போர்க்கொடி துாக்கினார். அவருக்கு 18 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.கட்சி தலைமை கேட்டுக் கொண்டதால் ஓராண்டாக பைலட் தரப்பினர் அமைதி காத்து வந்தனர்.காங்., ஆளும் பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து இடையே மோதல் ஏற்பட்டது. கட்சி தலைமை தலையிட்டு சுமுக முடிவு ஏற்பட்டுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரரான சித்து, கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து ராஜஸ்தானில் கட்சியில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண தலைவர் சோனியா மற்றும் அவரது மகன் ராகுல் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். சந்திப்புஅதன்படி கட்சியின் பொதுச் செயலர்களான கே.சி.வேணுகோபால், அஜய் மாக்கன் ஆகியோர் ஜெய்ப்பூரில் முதல்வர் அசோக் கெலாட்டை நேற்று முன்தினம் இரவு சந்தித்து பேசினர். மூன்று மணி நேரத்துக்கு மேலாக இந்த சந்திப்பு நடந்தது.


latest tamil news


இந்நிலையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது.இது குறித்து அஜய் மாக்கன் கூறியுள்ளதாவது:கட்சியில் எந்தப் பிரச்னையும் இல்லை. அனைவருடனும் பேசினோம். கட்சி தலைமை எடுக்கும் எந்த முடிவையும் ஏற்பதாக கூறியுள்ளனர்.நிர்வாகிகள் மாற்றம் மற்றும் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து, அடுத்த சில நாட்களுக்குள் கட்சி தலைமை முடிவு எடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X