பொது செய்தி

இந்தியா

உலக பாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு

Updated : ஜூலை 26, 2021 | Added : ஜூலை 26, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி-தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ராமப்பா கோவிலை, 'யுனெஸ்கோ' எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின், கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு மையம், உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.தெலுங்கானாவின் வாரங்கல் மாவட்டம், பாலம் பேட்டில் தொன்மை வாய்ந்த ராமப்பா கோவில் உள்ளது. காகதிய வம்ச மன்னர்களால், 13ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவில் சிற்ப வேலைப்பாடுகளுக்கு

புதுடில்லி-தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ராமப்பா கோவிலை, 'யுனெஸ்கோ' எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின், கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு மையம், உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.



latest tamil news



தெலுங்கானாவின் வாரங்கல் மாவட்டம், பாலம் பேட்டில் தொன்மை வாய்ந்த ராமப்பா கோவில் உள்ளது. காகதிய வம்ச மன்னர்களால், 13ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவில் சிற்ப வேலைப்பாடுகளுக்கு சிறப்பு பெற்றது. இந்த கோவிலை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.


latest tamil news


இது பற்றி பிரதமர் மோடி கூறுகையில், ''ராமப்பா கோவிலை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இதற்காக தெலுங்கானா மாநில அரசுக்கும், மக்களுக்கும் பாராட்டு தெரிவிக்கிறேன்.''இந்த கோவிலுக்கு அனைவரும் சென்று ராமப்பாவை வழிபடுவதுடன், கோவிலில் உள்ள சிற்ப வேலைப்பாடுகளையும் பார்த்து ரசிக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
26-ஜூலை-202112:59:59 IST Report Abuse
Dhurvesh இதை கட்டிய மோடிக்கு நன்றி என்று வட நாட்டில் மீம்ஸ் ...
Rate this:
Suresh Kumar - Salem,இந்தியா
26-ஜூலை-202115:21:25 IST Report Abuse
Suresh Kumarஅயையோ. இந்த கோவில் தமிழ் நாட்டில் இல்லாம போச்சே, மிஸ் பண்ணீட்டமே என்று ஸ்டாலின் மீம்ஸ்.....
Rate this:
Cancel
Senthil Raman - Coimbatore,இந்தியா
26-ஜூலை-202111:07:14 IST Report Abuse
Senthil Raman மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்...அப்படியே தமிழகத்தில் சிதைந்து கொண்டிருக்கும் பல கோவில்களையும் இந்த அறநிலையத்துறையிடம் இருந்து காப்பாற்றுங்கள்..
Rate this:
Cancel
26-ஜூலை-202107:33:22 IST Report Abuse
அப்புசாமி வாரங்கலிலிருந்து கிட்டத்தட்ட 50, 60 கிலோமீட்டர் சைக்கிளில் சென்று அந்தக் கோவிலை பார்த்திருக்கிறேன். ஒரு ஏரியும் உண்டு. அப்போது கிராமத்தில் மின்விளக்கு கூட இல்லை. சாப்பாடு வசதியும் கிடையாது. ஒரு குடிசை வீட்டில் 5 ரூவாய்க்கு சாதமும் குழம்பும் குடுத்தார்கள். இன்று நிலைமை எப்படின்னு தெரியலை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X