அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மாஜி' மந்திரி விஜயபாஸ்கரின் மனைவி, சகோதரர் மீது வழக்கு

Updated : ஜூலை 26, 2021 | Added : ஜூலை 26, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை-வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி மற்றும் சகோதரர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.அ.தி.மு.க., ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர், பஸ்கள், உதிரி பாகங்கள், வேகக் கட்டுப்பாட்டு கருவி மற்றும் ஒளிரும் பட்டைகள் கொள்முதல் செய்ததில், பல கோடி ரூபாய்

சென்னை-வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி மற்றும் சகோதரர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.



latest tamil news



அ.தி.மு.க., ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர், பஸ்கள், உதிரி பாகங்கள், வேகக் கட்டுப்பாட்டு கருவி மற்றும் ஒளிரும் பட்டைகள் கொள்முதல் செய்ததில், பல கோடி ரூபாய் சுருட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து, விஜயபாஸ்கர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாக வழக்கு பதிந்தனர்.

சென்னை மற்றும் கரூரில் அவரது உறவினர், உதவியாளர்கள் வீடுகள், அலுவலகங்கள் என, 26 இடங்களில், கடந்த 22ல் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 25.56 லட்சம் ரொக்கம் மற்றும் சொத்து ஆவணங்களை கைப்பற்றினர். வங்கி கணக்குகளையும் முடக்கி உள்ளனர்.தொடர் விசாரணையில், விஜயபாஸ்கர் 2016 - 21 வரை அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக 2.68 கோடி ரூபாய்க்கு சொத்து குவித்து இருப்பது தெரிய வந்துள்ளது.


latest tamil news


கடந்த 2016 மார்ச் 23ல், இவரது சொத்து மதிப்பு 2.51 கோடி ரூபாய். இதுவே 2021 மார்ச் 15 வரை, 8.35 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அமைச்சராக இருந்தபோது விஜயபாஸ்கரின் சொத்து மதிப்பு 55 சதவீதம் உயர்ந்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த விவகாரத்தில், விஜயபாஸ்கரின் மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இருவர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்தனர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
26-ஜூலை-202111:28:00 IST Report Abuse
sankar அகத்தின் அழகு முகத்தில் நன்றாக தெரிகிறதே.
Rate this:
Cancel
ram - mayiladuthurai,இந்தியா
26-ஜூலை-202111:16:22 IST Report Abuse
ram இவர்கள் பத்து வருடம் பாம்பிற்கு பால் வார்த்தார்கள் அதன் பலன், மூன்று கோடி ஊழல் என்பது கவுன்சலர் லெவலில் செய்வது, திராவிடன் என்ற சொல்லை அசிங்க படுத்திவிட்டார்கள்.
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
26-ஜூலை-202108:27:12 IST Report Abuse
J. G. Muthuraj 55% வருமானத்திருக்கு அதிகமா சொத்து சேர்த்திருக்கிறாரா?...25 இலட்சம் தான் கைப்பற்றினார்களா?....அரசு பதவியில் அதுவும் அரசியலில் இருக்கும் ஒருவர் செய்யும் சராசரி ஊழல் போன்றுதான் தெரிகிறது.....இதுக்குப்போய் அலட்டிக்கிடலாமா? ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X