அரசியல் செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் திருடர்களா! ; தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கண்டனம்

Updated : ஜூலை 26, 2021 | Added : ஜூலை 26, 2021 | கருத்துகள் (42)
Share
Advertisement
சென்னை--கம்பம் பள்ளத்தாக்கு, முல்லை பெரியாறு பகுதி விவசாயிகளை திருடர்கள் என, விமர்சித்த தமிழக நிதியமைச்சருக்கு, மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு, முல்லை பெரியாறு ஆற்று பகுதி விவசாயிகள் கிணறு, ஆழ்துளை கிணறுகளில் இருந்தும், ஆற்றில் இருந்து வாய்க்கால் வாயிலாகவும் நீர்

சென்னை--கம்பம் பள்ளத்தாக்கு, முல்லை பெரியாறு பகுதி விவசாயிகளை திருடர்கள் என, விமர்சித்த தமிழக நிதியமைச்சருக்கு, மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.



latest tamil news


அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு, முல்லை பெரியாறு ஆற்று பகுதி விவசாயிகள் கிணறு, ஆழ்துளை கிணறுகளில் இருந்தும், ஆற்றில் இருந்து வாய்க்கால் வாயிலாகவும் நீர் பாய்ச்சுகின்றனர். ஆனால், ஆற்று நீரை திருடு வதாக விவசாயிகளுக்கான மின்சார இணைப்பை அதிகாரிகள் துண்டித்துஉள்ளனர்.


latest tamil news


இதனால், விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.இம்மாதம் 8ம் தேதி, மதுரையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், ஆற்று நீரை பாய்ச்சும் விவசாயிகளை திருடர்கள் என, நிதியமைச்சர் தியாகராஜன் கூறியுள்ளார். இது, கண்டிக்கத்தக்கது. அதேநேரம், அப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதார சிக்கலுக்கு, முதல்வர் தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-ஜூலை-202104:37:15 IST Report Abuse
அப்புசாமி அறிக்கை கடைசியிலே ஜெய் ஹிந்த் போடவேயில்லியே? என்ன நாட்டுப்பற்று இருக்கு இவருக்கு? கெவுனர் மட்டும்தான் ஜெய்ஹிந்த் சொல்லணுமா?
Rate this:
Cancel
balakrishnan - Mangaf,குவைத்
26-ஜூலை-202114:41:19 IST Report Abuse
balakrishnan உடன் பிறப்புகள் விவசாயிகளையும் அவர்களைப்போல் நினைத்திருப்பார்கள் போல .
Rate this:
Cancel
rajan - erode,இந்தியா
26-ஜூலை-202114:08:35 IST Report Abuse
rajan ஒன்றிய அமைச்சர் மீனாட்சி லேஹி விவசாயிகளை கேவலமாக பேசி பிரச்சினையான பின் வாங்கினார் அதை அண்ணாமலை கண்டிக்கிறாரோ ஒரு மாநில அமைச்சர் சொன்னால் அது மாநில அளவில் சரி ஆனால் ஒன்றிய அமைச்சர் சொன்னால் அது இந்திய தேசம் முழுமைக்கும் என்பது முன்னாள் ஐ \பி \எஸ் அதிகாரிக்கு தெரியவில்லை என்றால் இந்த அண்ணாமலை யார் என்றே தெரியாது என்பது உண்மையாகிறது
Rate this:
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
26-ஜூலை-202116:33:10 IST Report Abuse
Rajநேரடியாக ஒன்றிய அமைச்சரய் கண்டிக்க முடியாதே.... அதனாலதான் இப்படி மறைமுகமாக கண்டிக்கிறார்...
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
26-ஜூலை-202117:10:12 IST Report Abuse
Sridharஒன்றிய அமைச்சர் சொல்லியது போராடும் ப்ரோக்கர்களை ஆகவே அது முற்றிலும் சரி. டக்லஸ் சொன்னது உண்மையான விவசாயிகளை நோக்கி, ஆகவே கண்டிக்கத்தக்கது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X