அரசியல் செய்தி

தமிழ்நாடு

வன்னியர் உள் ஒதுக்கீடு தவறில்லை: கே.எஸ்.அழகிரி

Updated : ஜூலை 26, 2021 | Added : ஜூலை 26, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
''வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கியதில் குறையிருந்தால், அதை பேசி தீர்க்க வேண்டும். இடஒதுக்கீடு கொடுத்ததே தவறு என்று கூறக்கூடாது,'' என, தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.அவர் அளித்த சிறப்பு பேட்டி:உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., தனித்து போட்டியிட போவதாக தகவல் பரவுகிறதே? இது, அனுமானமான கேள்வி. எங்களுக்கு அப்படி எந்த தகவலும் வரவில்லை.ராஜ்யசபா
வன்னியர்,உள் ஒதுக்கீடு, தவறு, இல்லை, கே.எஸ்.அழகிரி

''வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கியதில் குறையிருந்தால், அதை பேசி தீர்க்க வேண்டும். இடஒதுக்கீடு கொடுத்ததே தவறு என்று கூறக்கூடாது,'' என, தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

அவர் அளித்த சிறப்பு பேட்டி:உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., தனித்து போட்டியிட போவதாக தகவல் பரவுகிறதே? இது, அனுமானமான கேள்வி. எங்களுக்கு அப்படி எந்த தகவலும் வரவில்லை.

ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க., கூட்டணிக்கு இரு இடங்கள் கிடைக்கும் நிலையில், அதில் ஒன்றை காங்கிரசுக்கு விட்டு கொடுக்குமா?இதுபற்றி, தேர்தல்அறிவித்த பிறகே, கூட்டணி கட்சியினரோடு பேச முடியும்.

'நீட்' தேர்வை கொண்டு வந்ததே காங்கிரஸ் தான் என்று, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியிருக்கிறாரே?கடந்த 2014 வரை தமிழகத்தில் நீட் தேர்வு கிடையாது. பா.ஜ., ஆட்சிக்கு வந்த பிறகே, நீட் தேர்வே வந்தது. அப்போது, தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி தான் இருந்தது.

அதனால், இதில் காங்கிரசுக்கு எந்த பங்கும் இல்லை. ஏழு பேர் விடுதலையில், சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, டில்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். இனி, சட்ட ரீதியில் எடுக்க கூடிய நடவடிக்கை என்ன இருக்கிறது?இது, ஏற்கனவே முடிந்து போன விவகாரம். திரும்ப திரும்ப ஏழு பேர் விடுதலை என்றால், மக்களே யார் அந்த ஏழு பேர் என்று கேட்பர். காரணம், மக்களுக்கே அது மறந்து போய் விட்டது.

குடும்ப தலைவியருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஊக்க தொகை வழங்க வேண்டும் என, அ.தி.மு.க., -- பா.ஜ., கட்சிகள் அரசை தொடர்ந்து வலியுறுத்துகின்றனவே? தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட விஷயங்களை, ஒவ்வொன்றாக செய்து வருகின்றனர். அதேபோல, இதையும் செய்வர்.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ரெய்டுக்கு போனது, சரியான நடவடிக்கை அல்ல. அரசு மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் என,ஓ.பி.எஸ்., சொல்லி இருக்கிறாரே?சரியில்லை என்றால், எதனால் சரியில்லை என, தெளிவாக சொல்ல வேண்டும். லஞ்ச ஒழிப்பு துறையினர் ஆதாரங்களை திரட்டி தான் சோதனைக்கு சென்றனர்.அது, அவர்கள் கடமை. அதை செய்வது சரியில்லை என்றால், என்ன சரியில்லை?

ஜெ., பல்கலையை மூட முயற்சிப்பது, ஜெயலலிதா பெயரை மறைப்பதற்கான முயற்சி என்கின்றனரே? பெயருக்கு தான் அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் ஜெ., பெயரில் பல்கலை அமைத்தார்களே தவிர, அதற்காக செய்ய வேண்டிய காரியம் எதையும் செய்யவில்லை.செயல்படாத ஒரு பல்கலை தேவையில்லை என, தி.மு.க., அரசு முடிவெடுக்கிறது. அதில் என்ன தவறு?


latest tamil news


தமிழகத்தில் தி.மு.க.,வுக்கும், பா.ஜ.,வுக்கும் தான் இனி போட்டியே என, பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறாரே?25 இடங்களில் போட்டியிட்டு காங்., 18 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. பா.ஜ., 20 இடங்களில் போட்டியிட்டு நான்கு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.வெறும் வாயால் முழம் அளக்கின்றனர். பா.ஜ., இங்கு யாருக்கும் போட்டியாக இருக்க முடியாது.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு அளித்ததற்கு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் வன்னியர் அல்லாத 115 ஜாதியினர் எதிர்க்கின்றனரே? இந்திய அரசியல் சட்டத்தின் முதல் திருத்தமே, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது தான்.அப்படித்தான், வன்னியர் என்ற ஒரு பெரும் சமூகத்துக்கு உள் இடஒதுக்கீடு வழங்கி இருக்கின்றனர்.இதில் குறைபாடு இருந்தால் அதை பேசி சரி செய்ய வேண்டுமேதவிர, அந்த இட ஒதுக்கீட்டை கொடுத்திருக்கவே கூடாது என சொல்வது தவறானது. இவ்வாறு அவர் கூறினார்.

-- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
26-ஜூலை-202115:35:49 IST Report Abuse
Vena Suna கூடாது இட ஒதுக்கீடு
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
26-ஜூலை-202111:38:22 IST Report Abuse
raja அத ஒரு வன்னியர் ஆனா நீங்க சொல்ல கூடாது....
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
26-ஜூலை-202110:46:23 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan உள்ளாட்சி தேர்தல் வாக்கு பிச்சைக்கு இப்போது உளறுகிறார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X