பொது செய்தி

இந்தியா

கருணாநிதி எழுதிய புத்தகங்கள்; ஜனாதிபதியின் ஆசை

Updated : ஜூலை 26, 2021 | Added : ஜூலை 26, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
புதுடில்லி: சமீபத்தில் டில்லி வந்திருந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். அப்போது, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியைப் பாராட்டி பேசினாராம் ஜனாதிபதி.'உங்கள் தந்தையின் எழுத்துக்களைப் பற்றி பலர் சொல்லி கேட்டிருக்கிறேன். தலித் மக்களுக்கு அதிக அளவில் உதவியிருக்கிறாராமே. அவர் எழுதிய புத்தகங்களை படிக்க விரும்புகிறேன்' என

புதுடில்லி: சமீபத்தில் டில்லி வந்திருந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். அப்போது, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியைப் பாராட்டி பேசினாராம் ஜனாதிபதி.'



latest tamil news



உங்கள் தந்தையின் எழுத்துக்களைப் பற்றி பலர் சொல்லி கேட்டிருக்கிறேன். தலித் மக்களுக்கு அதிக அளவில் உதவியிருக்கிறாராமே. அவர் எழுதிய புத்தகங்களை படிக்க விரும்புகிறேன்' என சொன்னாராம்


latest tamil news


ஜனாதிபதி.'கருணாநிதி எழுதிய புத்தகங்கள் தமிழில் தான் உள்ளன; ஆங்கிலத்தில் இருந்தால் எனக்கு அனுப்பி வையுங்கள்' என, முதல்வரிடம் கேட்டுக் கொண்டாராம் ஜனாதிபதி. உடனே டி.ஆர். பாலு மற்றும் சிவாவிடம், 'கருணாநிதியின் புத்தகங்கள் ஆங்கிலத்தில் இருக்கிறதா என தேடுங்கள்; கிடைத்தால் உடனே ஜனாதிபதியிடம் கொடுத்து விடுங்கள்' என உத்தரவிட்டாராம் முதல்வர்.

எப்படியோ தேடி கருணாநிதியின் கட்டுரைகள் அடங்கிய ஆங்கில புத்தகத்தைக் கண்டுபிடித்துள்ளனர் சிவாவும், பாலுவும். இந்த புத்தகம் உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரும் நன்றி தெரிவித்தாராம்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
26-ஜூலை-202118:16:02 IST Report Abuse
vpurushothaman அழித்தெழுதாச் சித்திரமே ஆடி வரும் பொன் விளக்கே என்ற அடுக்கு மொழி வசனங்களையும் ஆங்கிலப்படுத்தி அனுப்பலாம்.
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
26-ஜூலை-202117:47:27 IST Report Abuse
sridhar Vibareedha aasai . கருணா என்னென்னவோ எழுதி இருக்கிறார் . இந்த வயதில் ஜனாதிபதி ஏன் அதை எல்லாம் படிக்க நினைக்கிறார் .
Rate this:
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
26-ஜூலை-202117:46:09 IST Report Abuse
Poongavoor Raghupathy கருணாநிதி பெரியார் அண்ணா எழுதிய நூல்கள் தமிழ்நாடு பள்ளியில் புத்தகமாக வெளிவந்தால் மாணவர்கள் மாக்கள் Aகிவிடுவார்கள். அதில் அண்ணாவின் வேலைக்காரி கலைஞரின் நெஞ்சுக்கு நீதி படித்தல் மாணவர்களை எங்கோ அழைத்து சென்றுவிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X