எங்கே செந்தமிழ் விருதுகள்?

Updated : ஜூலை 26, 2021 | Added : ஜூலை 26, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
புதுடில்லி: தமிழ் அறிஞர்களுக்கு செந்தமிழ் விருதுகள் மத்திய அரசு சார்பில் வழங்கப்படும்' என 2015ல் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆறு ஆண்டுகள் கடந்த பின்னும் இந்த விருதுகள் யாருக்கும் வழங்கப்படவில்லை. யாருக்கு இந்த விருதுகளை வழங்க வேண்டும் என்பதை முடிவு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது.இந்த குழு, பிரதமர் அலுவலகத்தோடு இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.'தன் பேச்சில்
எங்கே, செந்தமிழ், விருதுகள், மோடி

புதுடில்லி: தமிழ் அறிஞர்களுக்கு செந்தமிழ் விருதுகள் மத்திய அரசு சார்பில் வழங்கப்படும்' என 2015ல் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆறு ஆண்டுகள் கடந்த பின்னும் இந்த விருதுகள் யாருக்கும் வழங்கப்படவில்லை. யாருக்கு இந்த விருதுகளை வழங்க வேண்டும் என்பதை முடிவு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு, பிரதமர் அலுவலகத்தோடு இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.'தன் பேச்சில் திருக்குறள் மற்றும் தமிழ் இலக்கியங்களில் இருந்து மேற்கோள் காட்டி பேசும் மோடியால் அறிவிக்கப்பட்ட இந்த விருதுகள், ஏன் இதுவரை வழங்கப்படவே இல்லை' என கேள்விகள் எழுந்து உள்ளன.


latest tamil news


இந்த விஷயம் தெரிந்ததும் மிகவும் கோபப்பட்டாராம் மோடி. 'ஏன் இதுவரை எதுவும் நடக்கவில்லை' என கேள்வி கேட்டுள்ளார். எனவே ஆறு ஆண்டுகளுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக விரைவில் இந்த விருதுகள் வழங்கப்படும் என சொல்லப்படுகிறது.சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ல் இந்த விருதுகள் பெற்றவர்கள் பட்டியல் வெளியாகும் என்கின்றனர் அதிகாரிகள்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
26-ஜூலை-202118:10:11 IST Report Abuse
vpurushothaman அவ்வப்போது மோடிஜி இது போன்று கூறுவார். அதற்கெல்லாம் முக்கியத்துவம் உள்ளதா எனப் பார்ப்போம். ஒரு வேளை இன்னமும் செந்தமிழ் விருதுக்குத் தகுதி பெற்றோர் இல்லையோ என்னமோ ?
Rate this:
Cancel
தத்வமசி - சென்னை ,இந்தியா
26-ஜூலை-202114:43:56 IST Report Abuse
தத்வமசி திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழ் தேய்ந்து கொண்டு இருப்பது நிதரிசனம். பள்ளிகளில் தமிழ் வழியில் படிப்பவர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள். பத்தாம் வகுப்பு வரை தமிழை கட்டாயமாக இரண்டாம் மொழியாக படித்தே ஆகவேண்டும் என்று கட்டளை இடுவதால் தமிழ் வளர்ந்து விடாது. பள்ளி நாட்களிலேயே இலக்கியங்களை படிப்பவர்கள் மிக மிக குறைவு. தமிழை யாரும் சரியாக பேசுவது கிடையாது. ழ வராது, ற வராது, ச்சன்னா, ன், ண் எங்கே வரவேண்டும், வரக்கூடாது என்று தெரியாது, ர, ற வித்தியாசம் தெரியாது. கல்லூரிகளில் தமிழ் இளங்கலை மற்றும் முதுகலை, ஆய்வு வகுப்புகளில் மாணவர்கள் பத்தினைந்து வருடத்திற்கு முன் எவ்வளவு இருந்தனர் ? பல் துறைகளில் ஒரு தாளாக எடுத்து படிப்பவர்கள் தான் அதிகம் உள்ளனர். முழுவதுமாக தமிழையே எடுத்து படிக்கும் மாணவர்கள் இன்று எவ்வளவு உள்ளனர் என்று நெஞ்சை தொட்டு கணக்கெடுத்து வெள்ளை அறிக்கை விடட்டும் திராவிடியன் ஸ்டாக். தமிழ் இலக்கியங்கள் காற்றில் பறக்கின்றன. யாரும் படிப்பதில்லை. அது பற்றி எந்த சிந்தையாலர்களின் கூட்டம் நடைபெறுவது இல்லை. இலக்கிய மன்றங்கள் இல்லை. அப்படி ஏற்பாடு நடந்தால் தனிநபர் பூசனை தான் நடக்கிறது. பட்டிமன்றத்தில் பேசுவதற்கு தான் தமிழ் பேராசிரியர்கள் என்கிற நிலைமை வந்து விட்டது. அதில் என்றாவது தமிழ் இலக்கியங்கள் பற்றி பேசப்படுகிறதா என்றா இல்லை ? எல்லாம் தொலைகாட்சிக்காக. தமிழ் அறிஞர்கள் இப்போது இப்படித்தான் பிழைத்துக் கொண்டுள்ளனர். அதனால் தமிழ் புலவர்கள் குறைந்து கொண்டே வருகின்றனர். மெட்டு, மொட்டு, மாடி, பாடி என்று பாட்டு எழுதுபவர்கள் பெரியாளாகி விட்டனர். திரைப்படங்களில் பாட்டுக்களின் தரத்தினை கண்டே கூறிவிடலாம் தமிழின் தரம் எப்படி உள்ளது என்று. தமிழ் வாழ்க என்று எழுதி வைப்பதால் தமிழ் வளர்ந்து விடாது. அதற்க்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும். காழ்ப்புணர்ச்சியில் பிராமணர்களை புறம் தள்ளி வைத்தால் தேவபாசை ஒழிந்து விடும் என்று நினைத்தால், தமிழுக்கும் அந்த நிலை வெகு தொலைவில் இல்லை.
Rate this:
26-ஜூலை-202115:20:06 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்பின்னர் உங்களை போன்ற எட்டப்பர்கள் இருக்கும்போது அப்புற என்ன ::தமிழுக்கும் அந்த நிலை வெகு தொலைவில் இல்லை....
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன்தவறான தகவல் இன்றைய செய்தி - தனியார் பள்ளிகளிலிருந்து சுமார் 80 000 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் தமிழ் இலக்கியங்கள் மட்டுமா புத்தக வாசிப்பே குறைந்து வருகிறது மகாபாரதத்தில் தர்மர் தக்கது வாழும் தகாதது வீழும் என்று சொன்னார் எண்ணெயைத்தான் தேய்க்க முடியும் எழுத்தை யாராலும் மாற்ற முடியாது என்பார்கள் ஆம் கோவில்களில் சிவாச்சாரியார்களும் உண்டு மடப்பள்ளிகளும் உண்டு...
Rate this:
Cancel
Nesan - JB,மலேஷியா
26-ஜூலை-202114:39:01 IST Report Abuse
Nesan இவர் தமிழ் பற்று புல்லரிக்குது. இவரிடமிருந்து விருதுகள் வாங்குவதற்கு பதிலாக தமிழகத்தை நிம்மதியாக ஆட்சி செய்ய, குழப்பத்தை உருவாக்காமல் இருக்க சொல்லுங்க. தமிழன் என்று தலைசிறந்தவன்தான். உலகு அறியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X