பொது செய்தி

தமிழ்நாடு

இன்றும் நாளையும் மிதமான மழை பெய்யும்

Updated : ஜூலை 26, 2021 | Added : ஜூலை 26, 2021
Share
Advertisement
சென்னை---தென்மேற்கு பருவக் காற்றால், ஐந்து மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக, கணிக்கப்பட்டுள்ளது.சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இன்றும், நாளையும் இடி,

சென்னை---தென்மேற்கு பருவக் காற்றால், ஐந்து மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக, கணிக்கப்பட்டுள்ளது.



latest tamil news


சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.மற்ற மாவட்டங்களில் இன்று வறண்ட வானிலையுடன், சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையில் இன்று அதிகபட்சம், 37 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், சோலையாறு, 9; சின்னக்கல்லார், 7; வால்பாறை, 6; சின்கோனா, 5; ஏற்காடு, 4; பந்தலுார், 3; சித்தார், 2; பெரியாறு, தளி, 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.


latest tamil news


தெற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில், வரும் 29ம் தேதி வரையிலும், மணிக்கு 40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில், நாளை வரை மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். இந்த தேதிகளில் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X