பொது செய்தி

தமிழ்நாடு

'போலீஸ் வாகனத்தையும் பயன்படுத்த வேண்டாம்னு சொல்லிடுங்க': போலீசார் வலியுறுத்தல்

Updated : ஜூலை 26, 2021 | Added : ஜூலை 26, 2021 | கருத்துகள் (38)
Share
Advertisement
மதுரை : போலீஸ் பணியின்போது அரசு பஸ்களில் சீருடையுடன் சென்றால் கட்டணம் செலுத்த தேவை இல்லை. மற்ற நேரங்களில் இலவசமாக பயணிக்கக்கூடாது என போலீசாருக்கு டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அதேபோல் பணி நேரம் தவிர மற்ற நேரங்களில் போலீஸ் வாகனத்தை பயன்படுத்தக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.போலீசார் கூறியதாவது: உயர் பதவியில்
Police, DGP, Sylendra Babu

மதுரை : போலீஸ் பணியின்போது அரசு பஸ்களில் சீருடையுடன் சென்றால் கட்டணம் செலுத்த தேவை இல்லை. மற்ற நேரங்களில் இலவசமாக பயணிக்கக்கூடாது என போலீசாருக்கு டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அதேபோல் பணி நேரம் தவிர மற்ற நேரங்களில் போலீஸ் வாகனத்தை பயன்படுத்தக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

போலீசார் கூறியதாவது: உயர் பதவியில் உள்ளோரும், ஓய்வு பெற்ற சிலரும் அரசு ஊழியர்களான போலீசாரை தங்களது அதிகார துஷ்பிரயோகம் மூலம் வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்துகின்றனர். பணியில் உள்ளோர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாகனத்தை குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, உறவினர்களுக்கும் பயன்படுத்துகின்றனர். சந்தைக்கு செல்வதற்குகூட போலீஸ் வாகனத்தை பயன்படுத்துகின்றனர்.


latest tamil news



அவர்களுக்கு அரசு நல்ல சம்பளம் தரும்போது இதுபோன்ற சலுகைகளை ரத்து செய்தால் அரசுக்கு நிதிச்சுமையும், போலீசாரின் பணிச்சுமையும் குறையும். அதிகாரிகளே தவறு செய்யும்போது நாம் செய்தால் என்ன என்ற எண்ணம் போலீசாருக்கு ஏற்படாது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு டி.ஜி.பி., அறிவுரை வழங்க வேண்டும், என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramshanmugam Iyappan - Tiruvarur,கத்தார்
28-ஜூலை-202116:49:51 IST Report Abuse
Ramshanmugam Iyappan காலம் கருதாமல் பணியில் இருப்பவர்களுக்கு இந்த சலுகைகள் அவசியமே
Rate this:
Cancel
Natesan Narayanan - Sydeny,ஆஸ்திரேலியா
28-ஜூலை-202105:53:22 IST Report Abuse
Natesan Narayanan பெரும்பாலான ஐ பி எஸ் அதிகாரி வீட்டில் சமையல் செய்வது முதல் காய்கறி வாங்கி குழந்தைகளை பராமரிப்பது வரை கான்ஸ்டாப்பிலே . நான் ஒரு ஐ பி எஸ் ஆபிஸ்ர் குழந்தையிடம் எப்படி நீ பிற்காலத்தில் செய்வாய் என்றல்? பதில் நானும் ஐ பி எஸ் படித்து இது மாதிரி நடத்துவேன் . இது தான் பதில் . நாயை கழுவி நடு வீட்டில் வைத்தாலும் ?
Rate this:
Cancel
gayathri - coimbatore,இந்தியா
27-ஜூலை-202110:36:12 IST Report Abuse
gayathri அரசு வாகனம் தவறாக பயன்படுத்துவது மட்டுமல்ல அதற்கான எரிபொருள், நிர்வாக செலவு எல்லாமே மக்கள் பணத்தில்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X