சென்னை: தமிழகத்தில், அரசு போக்குவரத்து கழகம் சார்பில், புதிதாக இயக்கப்படும் வழித்தட பஸ்களில், முதல்வர் ஸ்டாலின் படம் ஒட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கொரோனா தொற்று பாதிப்பு குறைந்ததால், பஸ் போக்குவரத்து மீண்டும் துவங்கியுள்ளது. பெண்கள், திருநங்கையர், ஊனமுற்றோருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசு பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. கடந்த ஆட்சியில், வசூல் குறைவால் நிறுத்தப்பட்ட வழித்தடங்களில், மீண்டும் பஸ்களை இயக்க வேண்டும் என்று, பொதுமக்கள் கோரி வருகின்றனர்.

தி.மு.க., நிர்வாகிகள் தங்கள் செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ள, மக்கள் கோரும் வழித்தடங்களில் பஸ்களை இயக்க வழி வகை செய்துள்ளனர். இதன்படி, சென்னை நங்கநல்லுாரில் இருந்து பிராட்வே, கோயம்பேடு; கீழ்கட்டளை - தி.நகர்; அய்யப்பன்தாங்கல் - தாம்பரம் என, 17 வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. இதேபோல, தமிழகம் முழுக்க, 65 பஸ்கள் புதிதாக இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் அனைத்திலும், முதல்வர் ஸ்டாலின் படம் ஒட்டி இயக்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE