இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிய பொன்னையா வாய்ப்பு ஏற்படுத்தி தந்து விட்டார்...

Updated : ஜூலை 26, 2021 | Added : ஜூலை 26, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
பாதிரியார் பொன்னையா கைது மட்டும் போதாது. வாக்காளர்களை மதத்தின் பெயரால் வளைத்தது குறித்து, கத்தோலிக்க கிறிஸ்துவ சபைகள் பதிலளிக்க வேண்டும். ஏனெனில், யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்று கிறிஸ்துவர்களுக்கு, அந்த சபைகள் தான் உத்தரவிட்டுள்ளன.- இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்'இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அனைவரும் அறிய ஒரு வாய்ப்பைபொன்னையா
இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிய பொன்னையா வாய்ப்பு ஏற்படுத்தி தந்து விட்டார்...

பாதிரியார் பொன்னையா கைது மட்டும் போதாது. வாக்காளர்களை மதத்தின் பெயரால் வளைத்தது குறித்து, கத்தோலிக்க கிறிஸ்துவ சபைகள் பதிலளிக்க வேண்டும். ஏனெனில், யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்று கிறிஸ்துவர்களுக்கு, அந்த சபைகள் தான் உத்தரவிட்டுள்ளன.
- இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்


'இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அனைவரும் அறிய ஒரு வாய்ப்பைபொன்னையா ஏற்படுத்திக் கொடுத்து விட்டார்; அவருக்கு நன்றி கூற வேண்டும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் அறிக்கை.


கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக தமிழக விவசாயிகளுக்கு, 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 2,500 கோடி ரூபாய் வழங்கப்படும்.
- தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி


'இவ்வளவு தொகை, மாநில அரசு தொகையா, மத்திய அரசு ஒதுக்கியுள்ள தொகையா என்பதையும் விவசாயிகளிடம் கூறினால் நன்றாக இருக்கும்...' என, கூறத் துாண்டும் வகையில், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி பேச்சு.


கிறிஸ்துவ பாதிரியார் பொன்னையா கைது செய்யப்பட்டுள்ளது, ஹிந்து மதத்தையும், பாரத மாதாவையும், எந்தவொரு ஜாதியையும் தவறாக பேசுவோருக்கு பாடமாக அமைய வேண்டும். எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கும் தான்!
- நடிகை காயத்ரி ரகுராம்


latest tamil news
'ஒரு பாதிரியார் தான் சிக்கிஉள்ளார். இவர் போல பலர், மறைமுகமாக நாட்டுக்கு எதிராக பேசிக் கொண்டு தான் இருக்கின்றனர்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., கலாசார பிரிவு தலைவர் நடிகை காயத்ரி ரகுராம் அறிக்கை.அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டதால், 'நீட்' தேர்வு கூடாது என்பவர்கள், ரஞ்சிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டதால் இனி, பிளஸ் 2 படிப்பே கூடாது என்பரா?
- தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி


'ஆமாம். சரியான கேள்வி. தற்கொலையை தடுக்க வேண்டிய கட்சிகள், ஊக்கமளிக்கும் வகையில் செயல்பட்டது தான் கொடுமை...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை.அ.தி.மு.க., ஆட்சியில் வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த பன்னீர்செல்வத்தால், 2,500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பயனாளிகள் இல்லாத இடங்களில் வீடுகளை கட்டி வீணாக்கியுள்ளார். 2011ல் கட்டப்பட்ட வீடுகள் இப்போதே பழுதடைந்து விட்டன.
- தமிழக வணிக வரித் துறை அமைச்சர் அன்பரசன்


'நீங்கள் சொல்வதைப் பார்த்தால், ஏழைகளுக்கு வீடுகள் கட்டியது தப்பு என்பது போலல்லவா இருக்கிறது... பராமரிக்கப்படாததால், அந்த வீடுகள் பழுதாகி இருக்கலாம்...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக வணிக வரித் துறை அமைச்சர் அன்பரசன் பேட்டி.வரலாற்று பாடங்களை திருத்தி, இந்திய வரலாற்றை, ஹிந்துத்துவா வரலாறாக மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது. மனித, ஜனநாயக உரிமைகளை பறிக்கும், 'உபா' போன்ற சட்டங்களை நிறைவேற்றி, ஆயிரக்கணக்கானோரை சிறையில் அடைத்து கொடுமைப் படுத்துகிறது.
- மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன்.


'நீங்கள் தவறுதலாக, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நிலவரத்தை, நம் நாட்டு நிலவரமாக மாற்றி கூறுகிறீர்களோ...' என, கேட்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் பேச்சு.

Advertisement


வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
27-ஜூலை-202119:58:46 IST Report Abuse
M  Ramachandran தமிழக ஊடகங்கள் தீ மு க்கா வின் கைக்கூலிகள். அவர்கள் எப்படி மறுப்பு செய்திகளை பிரசுரிப்பார்கள்? எதிர் பார்ப்பது வேஸ்ட்.
Rate this:
Cancel
Rajasekaran - Chennai,இந்தியா
26-ஜூலை-202121:59:00 IST Report Abuse
Rajasekaran பெரும்பாலான தினசரிகள் ( தினமலர் நீங்கலாக ) இந்த பொன்னையாவின் பேச்சைக்குறித்து ஒரு பாதுகாப்புடன் கூடிய மௌனத்தைக் கடைப்பிடிப்பதன் மர்மம் என்னவாக இருக்க முடியும் ? இதே தொனியில் கிரிராஜ் கிஷோர் போன்ற பா.ஜ.க. வினர் ஏதாவது பேசியிருந்தால், தலையங்கத்திருந்து தொடங்கி , வாசகர் கடிதங்கள் வரை அப்படி பேசியவரை வறுத்தெடுத்திருப்பார்கள் இதுதான் அவர்கள் நடுநிலையா ? அந்த மாதிரி பத்திரிகைகளை மன உளைச்சலுக்கு ஆளான, தேசத்தை நேசிக்கும் அனைத்து வாசகர்களும் புறக்கணித்தால் தான் அவை திருந்தும்
Rate this:
Cancel
Nachiar - toronto,கனடா
26-ஜூலை-202117:48:44 IST Report Abuse
Nachiar தினமலருக்கு நன்றி மனமார்ந்த நன்றி. இந்து சமயத்திற்கு எதிராக நடந்த இந்த ப்ரிஸ்ட்டின் (priest not father) அக்கிரமத்தை பயமில்லாமல் வெளியிட்டதற்கு. வேறு எந்த பிரபலமான பத்திரிகையும் இதைப்பற்றி முறையான இடத்தை கொடுத்து செய்தி வெளியிடவில்லை. அனால் இதே போல் இன்னும் அக்கிரமங்கள் நடக்கிறதே. அண்மையில் அம்மன் கோவில் சிலைகளுக்கு பாலியல் வன்முறைகள் நடந்ததை இளைய பாரதம் மூலம் அறிந்தேன். உங்களை போன்ற பத்திரிகைகள் முன்னோடியாக இந்த செய்திகளை வெளியிட வேண்டும் அப்படி செய்தால் பிற பத்திரிகைகளுக்கும் பயம் தெளியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X