கோவிட்; இந்தியாவில் 97.35 சதவீதம் பேர் நலம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கோவிட்; இந்தியாவில் 97.35 சதவீதம் பேர் நலம்

Updated : ஜூலை 26, 2021 | Added : ஜூலை 26, 2021
Share
புதுடில்லி: இந்தியாவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 97.35 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 39,361 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 3 கோடியே 14 லட்சத்து 11 ஆயிரமாக பதிவானது. ஒரே நாளில் 35,968 பேர் கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின்
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கோவிட், கோவிட்வைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: இந்தியாவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 97.35 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 39,361 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 3 கோடியே 14 லட்சத்து 11 ஆயிரமாக பதிவானது. ஒரே நாளில் 35,968 பேர் கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 05 லட்சத்து 79 ஆயிரத்தை தாண்டியது. தற்போது 4.11 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 416 பேர் பலியானதை அடுத்து, இதுவரை 4,20,967 பேர் உயிரிழந்துள்ளனர்.


latest tamil news



இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 97.35 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.34 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 1.31 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.


தடுப்பூசி


இந்தியாவில் இன்று (ஜூலை 26) காலை 8 மணி நிலவரப்படி 43.51 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 20,45,137 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


latest tamil news




உலக பாதிப்பு


இன்று (ஜூலை 26-ம் தேதி) காலை 10:00 மணி நிலவரப்படி உலகில் கோவிட் தொற்றால் 19 கோடியே 48 லட்சத்து 35 ஆயிரத்து 316 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 லட்சத்து 75 ஆயிரத்து 129 பேர் பலியாகினர். 17 கோடியே 67 லட்சத்து 79 ஆயிரத்து 229 பேர் மீண்டனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X