இந்தியாவில் 3வது அலை எப்படி இருக்கும்: மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன?

Updated : ஜூலை 26, 2021 | Added : ஜூலை 26, 2021 | கருத்துகள் (10) | |
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கோவிட் பெருந்தொற்றின் 3வது அலையின் பாதிப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளதாவது:மவுலானா ஆசாத் மருத்துவ கல்லூரி சமூக மருத்துவ துறை பேராசிரியை பிரக்யா சர்மா: 3வது அலை நிச்சயமான ஒன்று. ஊரடங்கு விதிமுறைகளை நடைமுறைப் படுத்துவதையும், தடுப்பூசி போடுவதையும் பொறுத்துதான் பாதிப்பு அமையும். ஆனால் பொதுமக்கள்

புதுடில்லி: இந்தியாவில் கோவிட் பெருந்தொற்றின் 3வது அலையின் பாதிப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளதாவது:மவுலானா ஆசாத் மருத்துவ கல்லூரி சமூக மருத்துவ துறை பேராசிரியை பிரக்யா சர்மா: 3வது அலை நிச்சயமான ஒன்று. ஊரடங்கு விதிமுறைகளை நடைமுறைப் படுத்துவதையும், தடுப்பூசி போடுவதையும் பொறுத்துதான் பாதிப்பு அமையும். ஆனால் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதில்லை அல்லது சரியாக அணிவதில்லை. துணியிலான முகக்கவசத்தை பலரும் அணிவது பலன்தராது.latest tamil newsவிரைவில் 3வது அலை!


சர்கங்காராம் மருத்துவமனையின் மருத்துவ துறை மூத்த ஆலோசகர் டாக்டர் பூஜா கோஸ்லா: உலகின் பல பகுதிகளில் இருந்தும் எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளன. இந்தியாவிலும் உள்ளது. 2வது அலை போன்ற நெருக்கடியைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். ஊரடங்கை தளர்த்தி அனைத்தையும் திறந்து விடுவது நல்லதல்ல. 3வது அலை விரைவில் வரலாம் என எல்லோரும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
latest tamil news


எய்ம்ஸ் மருத்துவமனையினர் கோவிட் தீவிர சிகிச்சை பிரிவு நிபுணர் டாக்டர் யுத்யாவிர் சிங்: கோவிட் பரவல் குறைவாக இருக்கும்போது, பொருளாதார நடவடிக்கைகளை தொடங்குவது முக்கியம்தான். ஆனாலும் தொற்றுக்கு எதிராக பாதுகாக்கப்பட்ட அணுகுமுறை தேவை. டில்லியில் பெரும்பாலோர் எதிர்ப்புச் சக்தியை பெற்றுவிட்டனர். அதனால், பாதிப்பு குறைவாக இருக்கலாம்.
மோசமாக இருக்காது!


இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலை சேர்ந்த டாக்டர் சமிரன் பாண்டா: 2வது அலையைப் போன்று 3வது அலை மோசமாக இருக்காது. ஊரடங்கு இல்லாத நிலையில், புதிய உருமாறிய வைரஸ்கள் வந்தால், அதுவும் எதிர்ப்பு சக்தியில் இருந்து அவை தப்பினால் தான் 3வது அலை நம்பத்தகுந்ததாக அமையும். 3வது அலையின் தாக்கத்தைத் தணிக்க தடுப்பூசிகள் போடுவது அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (10)

Rengaraj - Madurai,இந்தியா
31-ஜூலை-202112:15:26 IST Report Abuse
Rengaraj சமுதாய நலன் கருதி கடுமையான விதி முறைகளை பின்பற்ற வேண்டும். ஐயோ பாவம், வாழ்வாதாரம் என்று ஈவு இரக்கம் பார்க்காமல் விதிமீறல்களை தண்டிக்க வேண்டும். தடுப்பு ஊசி போட்ட சான்றிதழ்களை எல்லோரும் எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும். அது இருந்தால் தான் எங்கேயும் அனுமதி, (பஸ், ஹோட்டல், மால், கோவில், கல்யாணம், கருமாதி, அனைத்திலும் ) தடுப்பு ஊசி போடாத ஊழியர்களை வேலைக்கு வைத்திருக்கும் கடைகளை அடைக்கச்சொல்ல வேண்டும். எங்கெங்கெல்லாம் கூட்டம் கூடுகிறதோ அதற்கு அந்த நிறுவனம் அல்லது நிர்வாகம் அல்லது சம்பந்தப்பட்ட அமைப்பு அல்லது சம்பந்தப்பட்ட சங்கங்கள் இவை மட்டுமே சமூக இடைவெளி பராமரிப்பதற்கு பொறுப்பு என்று கண்டிப்பாக அவசர சட்டம் இயற்ற வேண்டும். விதி மீறல்களுக்கு இவற்றை தண்டிக்க வேண்டும்.
Rate this:
Cancel
V Rajasekaran - Chennai,இந்தியா
30-ஜூலை-202110:56:46 IST Report Abuse
V Rajasekaran Social distancing, wearing mask properly and cleanliness will save us from the third wave. Crowding should be totally avoided to restrict this virus.
Rate this:
Cancel
jaisankar P - VELLORE,இந்தியா
27-ஜூலை-202109:12:55 IST Report Abuse
jaisankar P iyya sonathu pol asuragalai than ithu thakim devargalai alla
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X