புதுடில்லி: இந்தியாவில் கோவிட் பெருந்தொற்றின் 3வது அலையின் பாதிப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளதாவது:
மவுலானா ஆசாத் மருத்துவ கல்லூரி சமூக மருத்துவ துறை பேராசிரியை பிரக்யா சர்மா: 3வது அலை நிச்சயமான ஒன்று. ஊரடங்கு விதிமுறைகளை நடைமுறைப் படுத்துவதையும், தடுப்பூசி போடுவதையும் பொறுத்துதான் பாதிப்பு அமையும். ஆனால் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதில்லை அல்லது சரியாக அணிவதில்லை. துணியிலான முகக்கவசத்தை பலரும் அணிவது பலன்தராது.
![]()
|
விரைவில் 3வது அலை!
சர்கங்காராம் மருத்துவமனையின் மருத்துவ துறை மூத்த ஆலோசகர் டாக்டர் பூஜா கோஸ்லா: உலகின் பல பகுதிகளில் இருந்தும் எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளன. இந்தியாவிலும் உள்ளது. 2வது அலை போன்ற நெருக்கடியைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். ஊரடங்கை தளர்த்தி அனைத்தையும் திறந்து விடுவது நல்லதல்ல. 3வது அலை விரைவில் வரலாம் என எல்லோரும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
![]()
|
எய்ம்ஸ் மருத்துவமனையினர் கோவிட் தீவிர சிகிச்சை பிரிவு நிபுணர் டாக்டர் யுத்யாவிர் சிங்:
கோவிட் பரவல் குறைவாக இருக்கும்போது, பொருளாதார நடவடிக்கைகளை தொடங்குவது
முக்கியம்தான். ஆனாலும் தொற்றுக்கு எதிராக பாதுகாக்கப்பட்ட அணுகுமுறை தேவை.
டில்லியில் பெரும்பாலோர் எதிர்ப்புச் சக்தியை பெற்றுவிட்டனர். அதனால்,
பாதிப்பு குறைவாக இருக்கலாம்.
மோசமாக இருக்காது!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலை சேர்ந்த டாக்டர் சமிரன் பாண்டா: 2வது அலையைப் போன்று 3வது அலை மோசமாக இருக்காது. ஊரடங்கு இல்லாத நிலையில், புதிய உருமாறிய வைரஸ்கள் வந்தால், அதுவும் எதிர்ப்பு சக்தியில் இருந்து அவை தப்பினால் தான் 3வது அலை நம்பத்தகுந்ததாக அமையும். 3வது அலையின் தாக்கத்தைத் தணிக்க தடுப்பூசிகள் போடுவது அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.