புதுடில்லி: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து ஏற்படும் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். நேற்று இரவு சிக்கிமிலும், இன்று அதிகாலை ஐதராபாத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
![]()
|
இதுகுறித்து தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளதாவது: சிக்கிம் மாநிலத்தில் நேற்று இரவு 8:39 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
![]()
|
இதேபோல் ஐதராபாத்தின் தெற்கு பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதிகாலை 5:00 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆகப் பதிவானது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் எதுவும் இல்லை. இவ்வாறு தெரிவித்து உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement