பிரிட்டனில் ஊரடங்கால் உடல் எடை அதிகரிப்பு: ஆய்வில் தகவல்

Updated : ஜூலை 26, 2021 | Added : ஜூலை 26, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
லண்டன்: பிரிட்டனில் நாடு தழுவிய அளவில் சுகாதாரம், உடல்நிலை குறித்து ஓபினியம் என்ற நிறுவனம் கணக்கெடுப்பு நடத்தியது. ஜூலை 2 முதல் ஜூலை 8ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 5,000 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில், 41 சதவீதத்தினர் தங்களின் எடை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர்.இதுகுறித்து இங்கிலாந்து பொது சுகாதார துறையின் தலைமை ஊட்டச்சத்து நிபுணர் அலிசன்

லண்டன்: பிரிட்டனில் நாடு தழுவிய அளவில் சுகாதாரம், உடல்நிலை குறித்து ஓபினியம் என்ற நிறுவனம் கணக்கெடுப்பு நடத்தியது. ஜூலை 2 முதல் ஜூலை 8ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 5,000 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில், 41 சதவீதத்தினர் தங்களின் எடை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர்.



latest tamil news


இதுகுறித்து இங்கிலாந்து பொது சுகாதார துறையின் தலைமை ஊட்டச்சத்து நிபுணர் அலிசன் டெட்ஸ்டோன் தெரிவித்து உள்ளதாவது: கடந்த 15 மாதங்களாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கால் மக்கள் மேற்கொண்ட பழக்க வழக்கங்களை மாற்றி கொள்ள வேண்டும். பலரின் உடல் எடை அதிகரித்திருப்பதை கண்டு ஆச்சரியம் ஏற்படவில்லை. சிற்றுண்டிகளை உண்டதும் வேண்டிய நேரத்தில் சாப்பிடாததும் உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்தது என கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சராசரியாக ஒருவருக்கு 4 கிலோ எடை அதிகரித்துள்ளதை இந்த கணக்கெடுப்பு உறுதிப்படுத்தி உள்ளது. இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, உடல் எடையைக் குறைக்க உதவும் வகையில் தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் ஒளிபரப்பப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


latest tamil news



சுகாதாரத்துறை அமைச்சர் ஜோ சர்ச்சில், 'அனைவருக்கும் பெருந்தொற்று பெரிய சவால்களை விடுத்துள்ளது. அவரவருக்கு ஏற்ற சுகாதாரமான வாழ்க்கை முறையை பின்பற்ற மக்களுக்கு உதவி செய்வோம். உடல் எடையை குறைப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் செயலிகளை பமக்கள் யன்படுத்த வேண்டும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும்' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
26-ஜூலை-202121:24:01 IST Report Abuse
மதுரை விருமாண்டி இருபத்தைந்து பவுண்டு எடை குறைந்து போகும் அளவுக்கு வீட்டுக்குள் நடைப்பயிற்சி மேற்கொண்டேன். ஃபிட்பிட் வாட்ச் துணையில் தினமும் குறைந்தபட்சம் 15000 நடை அடிகள் (steps) நடந்தும், 20 முறை மாடி ஏறி இறங்கியும் , தினசரி 3000 மொத்த கலோரிகள் (உடற்பயிற்சி மூலம் 1000 கலோரிகள்) எரித்தும், தொய்வில்லாமல் 250 நாட்களை தாண்டி செய்து கொண்டிருக்கிறேன். முயற்சி செய்கிறேன், செய்ய முடிகிறது. ஒரு மாதமாக போலிஸ் அதிகாரி சைலேந்திர பாபு அவர்களின் வயிற்றுப் பகுதிக்கான (core) உடற்பயிற்சியும் செய்ய ஆரம்பித்துள்ளேன். பலன் கண்கூடாகத் தெரிகிறது.
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
26-ஜூலை-202116:29:49 IST Report Abuse
Sivagiri அப்போ எவனுக்கும் சோற்றுக்கு பஞ்சமில்லை - அப்போ இன்னும் ஒரு அஞ்சாறு வருஷத்துக்கு போட்டெடுக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X