பெகாசஸ் ஒட்டுக்கேட்பு குறித்து கவலைப்படாத இந்திய அரசு: சிதம்பரம் விமர்சனம்

Updated : ஜூலை 26, 2021 | Added : ஜூலை 26, 2021 | கருத்துகள் (41)
Share
Advertisement
புதுடில்லி: பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தைப் பற்றிக் கவலைப்படாத ஒரே அரசு இந்தியாதான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.இஸ்ரேலின் என்.எஸ்.ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள்
Pegasus, PChidambaram, Congress, India, பெகாசஸ்,ஒட்டுக்கேட்பு, சிதம்பரம், காங்கிரஸ், மத்திய அரசு, இந்தியா

புதுடில்லி: பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தைப் பற்றிக் கவலைப்படாத ஒரே அரசு இந்தியாதான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் பார்லி.,யில் எழுப்பி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இந்த விவகாரத்தில் எந்தவிதமான ஒட்டுக்கேட்பும் நடக்கவில்லை, யாருடைய செல்போனும் கண்காணிக்கப்படவில்லை என்று மத்திய அரசு மறுக்கிறது. அதேநேரத்தில் பெகாசஸ் விவகாரத்தை இஸ்ரேல் அரசு தீவிரமாக எடுத்து விசாரித்து வருவதாக இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


latest tamil news



இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதிஅமைச்சருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் பதிவிட்டதாவது: பிரான்ஸ் அதிபர் மெக்ரான், இஸ்ரேல் பிரதமர் பென்னட்டை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, பெகாசஸ் உளவு செயலி குறித்த முழு விவரங்களையும் கேட்டுள்ளார். பிரான்சில் செல்போன்கள், குறிப்பாக அதிபரின் செல்போன் ஹேக் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக் குறித்தும் பேசியுள்ளார். அதற்கு இஸ்ரேலிய பிரதமர், இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு விரைவில் தெரிவிக்கிறேன் என உறுதியளித்துள்ளார்.


ஆனால், பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் குறித்து கவலைப்படாத ஒரே அரசு இந்தியாவில்தான் இருக்கிறது. ஏனென்றால், ஒட்டுக்கேட்பு குறித்த முழுமையான தகவல்களையும் மத்திய அரசுஅறிந்துள்ளதால், வேறு எந்தத் தகவலையும் இஸ்ரேலிடமும், என்எஸ்ஓ அமைப்பிடமும் கேட்கத் தேவையில்லை என்று எண்ணுகிறதா. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-ஜூலை-202110:04:31 IST Report Abuse
ராஜா கோடிக்கணக்கான ரூபாய் திருடி நஷ்டத்தை ஏற்படுத்திய இவர் போன்றவர்கள் ஊருக்குள் உலாத்துவதை கண்டுகொள்ளாதது தான் குற்றம். அப்படி ஒன்று நடந்திருந்தால் தானே அரசு கவலைப்படும்.
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
27-ஜூலை-202107:24:04 IST Report Abuse
Ram sari , appuram
Rate this:
Cancel
Siva Kumar - chennai,இந்தியா
27-ஜூலை-202103:45:55 IST Report Abuse
Siva Kumar பசிக்கு எதற்கு பயம். ராகுலுக்கு எதிராக பேசியது எல்லாம் ஒட்டு கெடக்கப்பட்டிருக்கும் என்ற பயமா?விஞ்ஞானியை தேச துரோக வழக்கில் சிறையில் அடைத்த ஒரே கட்சி காங்கிரெஸ்த்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X