கார்கில் வெற்றி நாள்: ஜனாதிபதி மரியாதை

Updated : ஜூலை 26, 2021 | Added : ஜூலை 26, 2021 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி: நாடு முழுவதும் இன்று கார்கில் 22 வது வெற்றிநாள் கொண்டாடப்படுகிறது. காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் சென்ற, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அங்குள்ள நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினார்.இது போல் கார்கில் மாவட்டம் சென்ற ராணுவ தளபதி பிபின் ராவத் அங்கு மறைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். டில்லியில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும்

புதுடில்லி: நாடு முழுவதும் இன்று கார்கில் 22 வது வெற்றிநாள் கொண்டாடப்படுகிறது. காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் சென்ற, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அங்குள்ள நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினார்.



latest tamil news



இது போல் கார்கில் மாவட்டம் சென்ற ராணுவ தளபதி பிபின் ராவத் அங்கு மறைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். டில்லியில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் முப்படை தளபதிகள் பங்கேற்றனர்.

அண்டை நாடான பாகிஸ்தானுக்கும், நமக்கும், ஜம்மு - காஷ்மீரின் கார்கில் மலைப் பகுதியில், 1999ல், போர் நடந்தது.இந்த போர், 1999ம் ஆண்டு ஜூலை, 26ல் முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் வீரர்களை விரட்டி அடித்து, நம் வீரர்கள் கார்கில் மலை உச்சியில், நம் மூவர்ணக் கொடியை பறக்க விட்டனர். இந்த போரில், நம் வீரர்கள், 500 பேர் வீரமரணம் அடைந்தனர். ஒவ்வொரு ஆண்டும், ஜூலை, 26ம் தேதி, கார்கில் போர் வெற்றி தினமாக அனுசரிக்கப்படுகிறது.


latest tamil news


இதையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காஷ்மீர் சென்றார். அங்கு ராணுவ வீரர்கள் அணிவகுப்பு மரியாதையுடன் மறைந்த வீரர்கள் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினார்.
கார்கில் நினைவு தினம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில்: கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களின் தியாகம் என்றும் நினைவில் நிற்கும். அவர்களின் வீரம் நமக்கு ஊக்கம் அளிக்கிறது. என கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P.K.SELVARAJ - Chennai,இந்தியா
26-ஜூலை-202122:44:00 IST Report Abuse
P.K.SELVARAJ கார்கில் வெற்றி விழா நிச்சயம் தேவை தான். ஆனால் அதற்கு முன் பங்களாதேஷ் வெற்றி விழா தான் மிக முக்கியமான ஒன்று. அது இந்திரா காந்தி என்பதால் இந்த அரசுக்கு அது தேவை இல்லை.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
26-ஜூலை-202117:04:07 IST Report Abuse
Lion Drsekar கார்க்கில் என்றால் என என்றே தெரியாது >மன்னிக்கவும் ஆதி வயிறு பற்றி எரிகிறது வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X