பொது செய்தி

இந்தியா

ராகுலின் டிராக்டர் 'ஸ்டன்ட்' : டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : ஜூலை 26, 2021 | Added : ஜூலை 26, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
புதுடில்லி : வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பார்லிமென்ட் நோக்கி தனது எம்பிக்களுடன் காங்., எம்.பி., ராகுல் டிராக்டர் ஓட்டிச் சென்ற விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து 8 மாதங்களாக போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக தற்போது நடந்து பார்லிமென்ட்
RahulGandhiWithFarmers, Tractor, Parliment, Farmersprotest,

புதுடில்லி : வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பார்லிமென்ட் நோக்கி தனது எம்பிக்களுடன் காங்., எம்.பி., ராகுல் டிராக்டர் ஓட்டிச் சென்ற விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து 8 மாதங்களாக போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக தற்போது நடந்து பார்லிமென்ட் கூட்டத்தொடர் முடியும் வரை தினமும் பார்லிமென்ட் முன்பு விவசாயிகள் போராட முடிவு செய்து, போராடி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு எதிர்கட்சியான காங்கிரஸ் ஆதரவு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் இன்று தனது இல்லத்தில் இருந்து பார்லிமென்ட் நோக்கி தனது எம்பி.,க்களுடன் டிராக்டரில் பயணம் செய்து தனது எதிர்ப்பை தெரிவித்தார் ராகுல். டிராக்டரையும் ராகுலே ஓட்டி வந்தார். ராகுலின் டிராக்டர் பயணம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. #RahulGandhiWithFarmers, #Tractor ஆகிய ஹேஷ்டாக்குகளில் டிரெண்ட் ஆனது. ராகுலின் இந்த விஷயத்தை ஆதரித்தும், எதிர்த்தும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.


latest tamil news‛‛விவசாயிகளுக்கு ஆதரவாக எப்போதும் ராகுல் இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது. மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும்''. 8 மாதங்களாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். ஆனால் மத்திய அரசு அவர்களை கண்டு கொள்ளவில்லை. உண்மையான மண்ணனின் மைந்தர்களான விவசாயிகளின் வலியை அறித்தவர் ராகுல். அதனால் தான் களத்தில் இறங்கி அவர்களுக்காக போராடுகிறார். மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை இந்த போராட்டம் ஓயாது. விவசாயிகளுக்கும், ராகுலுக்கும் துணை நிற்போம்'' என பலரும் ஆதரித்து தங்கள் கருத்துக்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளனர்.

மற்றொரு சாரர், ‛‛ராகுலின் மற்றுமொரு அரசியல் ஸ்டன்ட் இது''. ''உண்மையில் இந்த சட்டங்களால் விவசாயிகளுக்கு லாபம் தான். ஆனால் ராகுல் உள்ளிட்ட எதிர்கட்சியினர் விவசாயிகளை தவறாக வழி நடத்துகின்றனர்'' என விமர்சித்தும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s t rajan - chennai,இந்தியா
26-ஜூலை-202121:29:17 IST Report Abuse
s t rajan தேவ கௌடா டிராக்டரில் வந்து காணாமல் போயிட்டாரு அடுத்தது ராகூலா ? இனி அடுத்தப்படியாக எருமை மேல் வருவாரோ ?
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
26-ஜூலை-202121:23:41 IST Report Abuse
BASKAR TETCHANA இங்கு ஒருவன் இருநூறு போலீஸ் உதவியுடன் சைக்கிள் ஒட்டி பரபரப்பு செய்கிறான். அங்கு பெரிய பப்பு ட்ராக்டர் ஒட்டி ஸ்டண்ட் செய்கிறது. நாட்டை குழப்பும் நாடோடி கும்பல்.
Rate this:
Kongu Tamilzan - Chennai,இந்தியா
27-ஜூலை-202108:08:46 IST Report Abuse
Kongu Tamilzanநாடோடி கும்பல் ...Spot on. Both these families are inclined to sabotage our growth just to fulfill their power hunger. Sick and tired of their false narratives and propaganda and amused by their cleverness in keeping the deceitful separatist feeling all along these years be it TN, Punjab, WB, Kerala and so on......
Rate this:
Cancel
GANESUN - Delhi,இந்தியா
26-ஜூலை-202120:43:06 IST Report Abuse
GANESUN தொளபதி 350 கோடி குடுத்து ஐடியா வாங்கி (பீகாரிக்கு மூளையில்லை அவங்க அமைச்சரே புலம்பல்) ஸ்டன்ட் நடத்தியதை ராவுலு பைசாவே செலவு செய்யாம செய்யிராரு... யார் பெஸ்ட் வாரிசு..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X