பிரதமர் உடனான சந்திப்பில் நடந்தது என்ன?: பழனிசாமி விளக்கம்

Updated : ஜூலை 26, 2021 | Added : ஜூலை 26, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
புதுடில்லி: பிரதமர் மோடியுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி நேரில் சந்தித்தனர். இச்சந்திப்பின்போது மேகதாது அணை, தடுப்பூசி வழங்குவது தொடர்பாக பிரதமரிடம் வலியுறுத்தினோம் என பழனிசாமி தெரிவித்துள்ளார்.சட்டசபை தேர்தலுக்கு பின், பிரதமர் மோடியை சந்தித்து பேச அனுமதி கேட்டு, பன்னீர்செல்வமும், பழனிசாமியும் தனித்தனியாக கடிதங்கள்
ADMK, Panneerselvam, Palanisamy, Meet, PMModi, Mekadatu, Vaccine, அதிமுக, பன்னீர்செல்வம், பழனிசாமி, பிரதமர், மோடி, சந்திப்பு, மேகதாது, தடுப்பூசி

புதுடில்லி: பிரதமர் மோடியுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி நேரில் சந்தித்தனர். இச்சந்திப்பின்போது மேகதாது அணை, தடுப்பூசி வழங்குவது தொடர்பாக பிரதமரிடம் வலியுறுத்தினோம் என பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டசபை தேர்தலுக்கு பின், பிரதமர் மோடியை சந்தித்து பேச அனுமதி கேட்டு, பன்னீர்செல்வமும், பழனிசாமியும் தனித்தனியாக கடிதங்கள் அனுப்பியும் அனுமதி தரப்படவில்லை. தற்போது, அவர்கள் சந்திப்பதற்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று (ஜூலை 25) காலை பன்னீர்செல்வமும், நேற்றிரவு பழனிசாமியும் டில்லி புறப்பட்டு சென்றனர். இவர்களுடன், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, தளவாய்சுந்தரம் உள்ளிட்டோரும் டில்லி சென்றனர்.


latest tamil news


இன்று (ஜூலை 26) காலை 11 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்த இருவரும் ஆலோசனையில் ஈடுபட்டனர். சந்திப்பிற்கு பிறகு, முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டசபைத் தேர்தலில் பிரசாரம் செய்ததற்காக பிரதமரிடம் நன்றி தெரிவித்தோம். தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினோம். மேகதாது அணையை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி தரக்கூடாது என்றும் பிரதமரிடம் கூறினோம்.


latest tamil news


நீர்ப்பற்றாக்குறையை போக்க காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த கோரினோம். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தினோம். ஆட்சியில் இல்லாவிட்டாலும் தமிழக மக்களின் நன்மைக்காக தொடர்ந்து பாடுபடும் கட்சி அதிமுக. திமுக அரசு தமிழகத்தில் லாட்டரி சீட்டை கொண்டுவராவிட்டால் நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
26-ஜூலை-202122:39:34 IST Report Abuse
தமிழவேல் திரும்பவும் கால்ல விழணுமா 🤔
Rate this:
Cancel
Tamil - chennai,இந்தியா
26-ஜூலை-202121:48:12 IST Report Abuse
Tamil They looted tamilnadu , afraid of Sasikala & Stalin these cowards gone for Asylum to center & center may lose vote if they helps this corrupted leaders and lose more parliament seats, eps & ops is zero now according to TN PPl.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
26-ஜூலை-202120:33:31 IST Report Abuse
RajanRajan கூட்டா டபாஸ் வேலை காட்டுறானுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X