பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம்: விசாரணை ஆணையம் அமைத்து மம்தா அதிரடி

Updated : ஜூலை 26, 2021 | Added : ஜூலை 26, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
கோல்கட்டா: பெகாசஸ் ஸ்பைவேர் மூலமாக முக்கிய நபர்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் விசாரணை ஆணையம் அமைத்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் இந்தியாவில் முக்கிய நபர்களின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. பார்லியில் கடந்த ஒரு
WestBengal, Forms, Commission, Investigate, PegasusSpyware, MamataBanerjee, மேற்குவங்கம், விசாரணை ஆணையம், பெகாசஸ், ஒட்டுக்கேட்பு, விவகாரம், மம்தா

கோல்கட்டா: பெகாசஸ் ஸ்பைவேர் மூலமாக முக்கிய நபர்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் விசாரணை ஆணையம் அமைத்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் இந்தியாவில் முக்கிய நபர்களின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. பார்லியில் கடந்த ஒரு வாரமாக இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நாட்டிலேயே முதன்முறையாக பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரிக்க விசாரணை ஆணையத்தை அமைத்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.


latest tamil news


இது குறித்து மம்தா கூறியதாவது: பெகாசஸ் ஒட்டுக்கேட்பு மென்பொருள் மூலம், நீதித்துறையைச் சேர்ந்தவர்கள், அரசியல் தலைவர்கள், மிக உயர்ந்த பொறுப்புகளில் இருப்போர்கூட கண்காணிக்கப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் இந்த பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விசாரணை அமைக்க பார்லி கூட்டத்தொடரில் மத்திய அரசு உத்தரவிடும் என எதிர்பார்த்தோம். ஆனால், அது நடக்கவில்லை, மத்திய அரசு அமைதியாக உட்கார்ந்திருக்கிறது. எனவே, பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விசாரிக்க விசாரணை ஆணையத்தை நாட்டிலேயே முதல் மாநிலமாக மேற்குவங்கம் அமைத்துள்ளது. இது சின்ன முயற்சிதான், இதைப் பார்த்து மற்ற மாநிலங்கள் விழித்துக்கொள்ளட்டும்.


latest tamil news


இந்த ஆணையம் விரைவாக விசாரணையைத் தொடங்க வேண்டும், மே.வங்கத்தில் ஏராளமானோரின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டிருக்கலாம். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி லோக்கூர், கோல்கட்டா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜோதிர்மயி பட்டாச்சார்யா ஆகியோர் தலைமையில் ஆணையம் செயல்படும். இந்த ஆணையம் சட்டவிரோத ஹேக்கிங், கண்காணித்தல், உளவு பார்த்தல், செல்போன் அழைப்புகளை பதிவு செய்தல் தொடர்பாக விசாரிக்கும். விசாரணைச் சட்டம் 1952ன் கீழ் இந்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-ஜூலை-202111:38:11 IST Report Abuse
ஆரூர் ரங் ஒட்டுக் கேட்பதை தவிர்க்க உங்க மொபைல் ஸ்க்ரீன்ல டேப் ஒட்ட😇 ஆலோசனை சொன்னதும் பீ. கே தானா,🤔,? நல்ல செல்லூர் ஐடியா😂 மொபைல் விலையை விட ஆலோசனை செலவு ஜாஸ்தியா,,?
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
27-ஜூலை-202108:03:18 IST Report Abuse
Kasimani Baskaran காமிராவில் மட்டுமில்லாமல் மைக்கிலும் சேர்த்து டேப் ஒட்டியிருந்தால் பாராட்டியிருக்கலாம். சும்மா சொல்லக்கூடாது. சி(ற)ரிப்பான செயல்பாடுதான்.
Rate this:
Cancel
Engineer - California,யூ.எஸ்.ஏ
27-ஜூலை-202107:00:58 IST Report Abuse
Engineer தைரியம் மிக்க பெண்மணி.. நினைத்தால் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் என்று இருக்கும் மோடி அரசுக்கு எதிர்க்குடுக்க இந்த பெண்ணால் மட்டும் தான் முடிகிறது...இதுபோல் பண்ணுவார் நம்ம ஊரு நாட்டாமை? மத்திய ஆட்சியில் இருந்தால் என்ன வேண்டுமலனாலும் செய்யலாம் என்று என்னனும் இவருக்கு இது ஒரு பாடம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X