அரசியல் செய்தி

தமிழ்நாடு

என்னை தோற்கடிக்க திமுக.,வில் உள்ளடி வேலை: அமைச்சர் துரைமுருகன்

Updated : ஜூலை 26, 2021 | Added : ஜூலை 26, 2021 | கருத்துகள் (50)
Share
Advertisement
வேலுார்: என்னை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக தி.மு.க., நிர்வாகிகள் உள்ளடி வேலை செய்தது எனக்கு தெரியும் என அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார்.காட்பாடி ஒன்றிய தி.மு.க., மேற்கு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், பொன்னையில் இன்று (ஜூலை 26) நடந்தது. இதில் காட்பாடி தொகுதி எம்.எல்.ஏ.,வும், நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பேசியதாவது: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில்
DMK, Duraimurugan, Minister, திமுக, அமைச்சர், துரைமுருகன்

வேலுார்: என்னை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக தி.மு.க., நிர்வாகிகள் உள்ளடி வேலை செய்தது எனக்கு தெரியும் என அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார்.

காட்பாடி ஒன்றிய தி.மு.க., மேற்கு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், பொன்னையில் இன்று (ஜூலை 26) நடந்தது. இதில் காட்பாடி தொகுதி எம்.எல்.ஏ.,வும், நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பேசியதாவது: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காட்பாடி தொகுதியில் வரும் பொன்னை, காட்பாடி யூனியன் உள்ளிட்ட பல பூத்துக்களில் தி.மு.க.,வுக்கு குறைவாகவே ஓட்டுக்கள் கிடைத்தது. என்னை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக தி.மு.க., நிர்வாகிகள் உள்ளடி வேலை செய்ததது எனக்கு தெரியும்.


latest tamil news


அவர்கள் பட்டியல் என்னிடம் உள்ளது. ஆனால் கடவுள் அருளால், கடைசி நேரத்தில் தபால் ஓட்டுக்களில் தான் நான் வெற்றி பெற்றேன். மறப்போம், மன்னிப்போம் என அண்ணா சொன்னதை போல வரும் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., வெற்றி பெறா விட்டால் துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கட்சியில் இருந்து நீக்கி விடுவேன். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh kumar - Salmiyah,குவைத்
27-ஜூலை-202108:31:47 IST Report Abuse
suresh kumar // ஆனால் கடவுள் அருளால்,..// அட, அப்படி ஒன்று இருப்பதாக திமுக பகுத்தறிவு ஒப்புக் கொள்ளாதே?
Rate this:
Cancel
raja - lalgudi,trichy,இந்தியா
27-ஜூலை-202108:17:59 IST Report Abuse
raja கடவுள் அருள்???????
Rate this:
Cancel
Lakshmipathi S - Bangalore,இந்தியா
27-ஜூலை-202108:09:55 IST Report Abuse
Lakshmipathi S பி.கே.சாமர்த்தியம் நமக்கு இல்லை என்பது தெரிந்து விட்டது. எனவே நம்மை விட பீஹாரிஸ் புத்தி கூர்மை உடையவர்கள் என்பது நிரூபணமாகிவிட்டது. அனால் அது மாய வித்தை. போகப்போக புரியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X