பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 1,785 பேராக குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு

Updated : ஜூலை 26, 2021 | Added : ஜூலை 26, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 1,785 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 26 பேர் உயிரிழந்து உள்ளனர். 2,361 பேர் குணமடைந்து உள்ளனர்.தமிழகத்தில் கடந்த 61 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 75 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில்

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 1,785 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 26 பேர் உயிரிழந்து உள்ளனர். 2,361 பேர் குணமடைந்து உள்ளனர்.தமிழகத்தில் கடந்த 61 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 75 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.



latest tamil news




இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 37,292 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப் பட்டன. அதில், 1,785 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,50,282 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 3,66,72,027 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கோவிட் உறுதியானவர்களில் 1,049 பேர் ஆண்கள், 736 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 14,90,054 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 10,60,190 ஆகவும் அதிகரித்து உள்ளது. 2,361 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,93,583 ஆக உயர்ந்துள்ளது.

26 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில்,5 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 21 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,937 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


மாவட்ட வாரியாக விபரம்



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தத்வமசி - சென்னை ,இந்தியா
26-ஜூலை-202122:39:39 IST Report Abuse
தத்வமசி பள்ளி மற்றும் கல்லூரிகளை உடனடியாக திறக்கலாமே. மாணவர்களின் கற்றலின் திறமை குறைந்து வருகிறது. கல்வியில் பிடிமானம் இல்லாமல் இருக்கிறார்கள். உடற்பயிற்சி இல்லை. மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி பெற்றோர்களுடன் சண்டை போடுகிறார்கள். ஆன்லைனில் தேர்வுகள் வைத்தாலும் அதில் சத்து இல்லை. அரசு பள்ளியில் பாடம் நடத்துவது கூட இல்லை. அதனால் குழந்தை தொழிலாளர்கள் அதிகமாகி விட்டனர். பள்ளி மற்றும் கல்லூரிகளை நம்பி இருக்கும் ஆசிரியர்கள், ஆயாக்கள், உணவு சமைப்பவர்கள், வண்டி ஓட்டுபவர்கள், அவற்றை பராமரிப்பவர்கள், நோட்டு புத்தகம் விற்பவர்கள், பென்சில் பேனா, மற்றும் பைண்டிங் செய்பவர்கள், சீருடை விற்பவர்கள், அதை தைப்பவர்கள், மின்வேலை, பராமரிப்பு வேலை செய்பவர்கள், டியூஷன் எடுப்பவர்கள், தோட்டக்கலை வேலை செய்பவர்கள், பள்ளி கல்லூரிகளில் பகுதி நேரமாக பலவித இணைக் கல்வி பயிற்றுவிப்பவர்கள், விளையாட்டு, மாணவர்களின் திறன் மேம்பாடு, இசை, நடனம், சிலம்பம், கராத்தே போன்ற விளையாட்டுகளை பயிற்றுவிப்பவர்கள், நொறுக்குத் தீனி விற்பவர்கள் என்று மிகப்பெரிய பட்டாளமே கல்வி நிறுவனங்களை நம்பி உள்ளன. இவற்றை கருத்தில் கொண்டு கொரோனா குறைந்துள்ள இந்த நேரத்தில் பள்ளிகளை படிப்படியாக திறக்கலாம். மூன்றாவது அலை என்று கூறி வருகிறார்கள். அது வராது என்கிறார்கள். வந்தாலும் சிறார்களுக்கு அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் கவலை இல்லை பள்ளிகளை அதுவும் மழலைப் பள்ளிகளை திறக்கலாம் என்று இப்போது ஒரு ஆய்வு கூறியுள்ளவற்றை கருத்தில் கொண்டு படிப்படியாக பள்ளி கல்லுாரிகளை தமிழக அரசு திறக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X