சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

பதவி காத்திருக்கு!

Added : ஜூலை 26, 2021
Share
Advertisement
பதவி காத்திருக்கு!'யாருக்கு என்ன தீங்கு செய்தோம்; ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது...' என சோகத்துடன் கூறுகின்றனர், சமீபத்தில் மத்திய அமைச்சர் பதவியை பறிகொடுத்த, 12 பா.ஜ., தலைவர்கள். மற்றவர்கள் இந்த சோகத்தில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்தாலும், இரண்டு பேர் மட்டும் இன்னும் அதை ஜீரணிக்க முடியாமல் புலம்புகின்றனர். சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக

 அக்கம் பக்கம்


பதவி காத்திருக்கு!



'யாருக்கு என்ன தீங்கு செய்தோம்; ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது...' என சோகத்துடன் கூறுகின்றனர், சமீபத்தில் மத்திய அமைச்சர் பதவியை பறிகொடுத்த, 12 பா.ஜ., தலைவர்கள். மற்றவர்கள் இந்த சோகத்தில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்தாலும், இரண்டு பேர் மட்டும் இன்னும் அதை ஜீரணிக்க முடியாமல் புலம்புகின்றனர். சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த ரவிசங்கர் பிரசாத்தும், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்த பிரகாஷ் ஜாவடேகரும் தான் அந்த தலைவர்கள்.
மத்திய அரசு மீது எதிர்க்கட்சியினர் எந்த குற்றச்சாட்டுகளையாவது பார்லிமென்டில் தெரிவித்தால், அதற்கு முதல் ஆளாக எழுந்து எதிர்ப்பு தெரிவிப்பவர் ரவிசங்கர் பிரசாத் தான். அடுக்கு அடுக்காக புள்ளி விபரங்களுடன் பதில் அளித்து, எதிர்க்கட்சியினரின் வாயை அடக்கி விடுவார்.
பிரகாஷ் ஜாவடேகரும் இவருக்கு சற்றும் சளைத்தவர் இல்லை. எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகளுக்கு, ஊடகங்களில் பதில் அளித்து அசத்துவார். 'கட்சி மேலிடத்துக்கு மிகவும் நெருக்கமானவர்கள்' என, பா.ஜ., மூத்த தலைவர்கள் கூட, இவர்களை பார்த்து பொறாமைப்பட்ட காலம் உண்டு. அமைச்சரவை மாற்றத்தில் இவர்கள் இருவரது பதவியும் பறிக்கப்பட்டபோது, அதை யாராலுமே நம்ப முடியவில்லை. 'மத்திய அமைச்சர் பதவியை விட, முக்கியமானபதவி காத்திருக்கிறது; அதனால் கவலைப்பட
வேண்டிய அவசியமில்லை' என, இருவரையும் தேற்றுகின்றனர் அவர்களது ஆதரவாளர்கள்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X