பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜூலை 26, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஜூலை 27, 2015ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில், 1931 அக்., 15ம் தேதி பிறந்தவர் ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லுாரியில், இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். சென்னை எம்.ஐ.டி.,யில் விண்வெளி பொறியியல் படிப்பில் சேர்ந்தார்.மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் முதன்மை விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார். பின்,


இதே நாளில் அன்று


ஜூலை 27, 2015



ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில், 1931 அக்., 15ம் தேதி பிறந்தவர் ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லுாரியில், இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். சென்னை எம்.ஐ.டி.,யில் விண்வெளி பொறியியல் படிப்பில் சேர்ந்தார்.மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் முதன்மை விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார். பின், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'இஸ்ரோ'வில் 20 ஆண்டுகள் பணியாற்றினார்.'அக்னி, பிருத்வி, ஆகாஷ்' உட்பட ஐந்து ஏவுகணை திட்டங்களிலும், பொக்ரான் அணுகுண்டு சோதனையிலும் முக்கிய பங்காற்றினார்.'பாரத ரத்னா, பத்ம பூஷண், பத்ம விபூஷண்' உள்ளிட்ட நாட்டின் உயரிய விருதுகளை பெற்றுள்ளார். 30-க்கும் மேற்பட்ட பல்கலைகள், இவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கியுள்ளன.
கடந்த 2002ல், நாட்டின் 11-வது ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். 'அக்னி சிறகுகள், எழுச்சி தீபங்கள்' உள்ளிட்ட சில புத்தகங்கள் எழுதியுள்ளார். இறுதி வரைக்கும் பிரம்மச்சாரியாக, எளிமையாக வாழ்ந்தார். 2015 -ஜூலை 27ம் தேதி, தன் 84வது வயதில் இயற்கை எய்தினார்.அப்துல் கலாம் காலமான தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
27-ஜூலை-202114:24:09 IST Report Abuse
vpurushothaman அக்கினிச் சிறகுகள் விரியட்டும். எழுச்சி தீபங்கள் பிரகாசிக்கட்டும். கலாம் சார் புகழ் ஓங்குக.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X