அசாம் - மிசோரம் எல்லையில் தாக்குதல்: 6 போலீசார் பலி

Updated : ஜூலை 26, 2021 | Added : ஜூலை 26, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
திஸ்பூர் :அசாம் - மிசோரம் எல்லையில் இன்று (ஜூலை 26) பிரிவினைவாத கும்பல் நடத்திய தாக்குதலில் அசாம் போலீசார், ஆறு பேர் உயிரிழந்தனர்.வடகிழக்கு மாநிலங்களான அசாமும், மிசோரமும், 164.6 கி.மீ., எல்லையை பகிர்ந்துள்ளன. இந்த இரு மாநிலங்களும், நில ஆக்கிரமிப்பு புகார்களை தொடர்ந்து முன்வைத்து வருகின்றன.இரு மாநிலங்களுக்கும் இடையிலான இந்த எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு
 அசாம் - மிசோரம், எல்லை, இரு பிரிவினர் , மோதல்,  6 போலீசார், பலி

திஸ்பூர் :அசாம் - மிசோரம் எல்லையில் இன்று (ஜூலை 26) பிரிவினைவாத கும்பல் நடத்திய தாக்குதலில் அசாம் போலீசார், ஆறு பேர் உயிரிழந்தனர்.

வடகிழக்கு மாநிலங்களான அசாமும், மிசோரமும், 164.6 கி.மீ., எல்லையை பகிர்ந்துள்ளன. இந்த இரு மாநிலங்களும், நில ஆக்கிரமிப்பு புகார்களை தொடர்ந்து முன்வைத்து வருகின்றன.
இரு மாநிலங்களுக்கும் இடையிலான இந்த எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் வடகிழக்கு மாநில முதல்வர்களை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்துப் பேசினார்.


அசாம், மிசோராம் எல்லை பிரச்னை துப்பாக்கி சூட்டில் 5 போலீசார் பலி

latest tamil news





இந்நிலையில் அசாம், மிசோரம் எல்லை பகுதியில் நேற்று மீண்டும் பயங்கர வன்முறை வெடித்தது. மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த பிரிவினைவாத கும்பல், அசாம் போலீசார் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. அரசு வாகனங்கள் சூறையாடப்பட்டன.

இந்த கொடூரமான தாக்குதலில் அசாம் போலீசார் ஆறு பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் இரு மாநில எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இதற்கிடையே, மிசோரம் முதல்வரும், மிசோ தேசிய முன்னணி தலைவருமான சோரம்தங்கா இருமாநில எல்லையில் நடந்த வன்முறை குறித்த, 'வீடியோ' ஒன்றை வெளியிட்டார். இந்த பிரச்னைக்கு தீர்வு காண அமித் ஷாவிடம் வலியுறுத்தி டுவிட்டரில் பதிவிட்டார்.
இதன்பின் அசாம் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான ஹிமாந்த பிஸ்வா சர்மா மற்றொரு வீடியோவை வெளியிட்டு, மிசோரம் அரசு மீது சரமாரியாக புகார் தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தான் இதற்கு தீர்வு காணவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-ஜூலை-202115:22:03 IST Report Abuse
Ganesan Madurai PLEASE DON'T REPEAT THE SAME COMMENTS
Rate this:
Cancel
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
27-ஜூலை-202107:31:43 IST Report Abuse
Nepolian S பிஜேபி ஒரு தேச விரோத கட்சி
Rate this:
Cancel
Krishnan - Chennai,யூ.எஸ்.ஏ
27-ஜூலை-202100:05:33 IST Report Abuse
Krishnan சீனப்பணமும் மிஷனரிகளின் பிரித்தாளும் ஆட்சியையும் சேர்ந்திருக்கும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X