பெட்ரோல் விலை உயர்வு ஏன்? லோக்சபாவில் அரசு விளக்கம்!

Updated : ஜூலை 28, 2021 | Added : ஜூலை 26, 2021 | கருத்துகள் (36)
Share
Advertisement
புதுடில்லி : 'பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் கலால் மற்றும் 'செஸ்' வரி வாயிலாக கிடைக்கும் வருவாய், நாட்டின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கும், உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கும் பயன்படுத்தப்படுகிறது' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. வளர்ச்சி திட்டம் பல்வேறு மாநிலங்களிலும் பெட்ரோல் விலை லிட்டர் 100 ரூபாயை கடந்து விட்டது. இது தொடர்பாக லோக்சபாவில்
பெட்ரோல் விலை , உயர்வு ஏன்? லோக்சபா, அரசு விளக்கம்!

புதுடில்லி : 'பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் கலால் மற்றும் 'செஸ்' வரி வாயிலாக கிடைக்கும் வருவாய், நாட்டின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கும், உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கும் பயன்படுத்தப்படுகிறது' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.


வளர்ச்சி திட்டம்


பல்வேறு மாநிலங்களிலும் பெட்ரோல் விலை லிட்டர் 100 ரூபாயை கடந்து விட்டது. இது தொடர்பாக லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் நேற்று கேள்வி எழுப்பின. அதற்கு மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதன் விபரம்:ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் 32.90 ரூபாய் கலால் மற்றும் செஸ் வரியாக வசூலிக்கப் படுகிறது. இதில் கிடைக்கும் வருவாயை வைத்து மருத்துவக் காப்பீட்டு திட்டம், விவசாயிகள் நல திட்டம், உணவு பாதுகாப்பு திட்டம், சமையல் எரிவாயு திட்டம், இலவச தடுப்பூசி உட்பட பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.கடந்த ஏழு ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 50 சதவீதம் அதிகரித்துஉள்ளது.
கடந்த 2014ம் ஆண்டில் 91 ஆயிரத்து 287 கி.மீ., ஆக இருந்த தேசிய நெடுஞ்சாலையின் நீளம், 2021 மார்ச்சில், ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 625 கி.மீ., ஆக அதிகரித்துள்ளது.


29.88 ரூபாய்



மத்திய அரசு வரிகள் தவிர, மாநில அரசுகளும் மதிப்பு கூட்டு வரியாக, 4.83 ரூபாயில் இருந்து 29.88 ரூபாய் வரை வரி வசூலிக்கின்றன.இந்த தொகை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடுமையாக உயர்ந்து வருவதும், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம்.இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
27-ஜூலை-202123:55:32 IST Report Abuse
Rajas தேசிய நெடுஞசாலைகள் யாருக்காக போடப்படுகின்றன. சாதாரண பொது மக்களுக்காகவா. அரசு செலவில் போடப்படும் தேசிய நெடுஞசாலைகளில் எப்படி தனியார் டோல்கேட் வருகின்றன.
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
27-ஜூலை-202123:51:42 IST Report Abuse
Rajas //////இலவச தடுப்பூசி உட்பட பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன////// ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு இந்தியனும் (குழந்தை முதல் முதிய வயதினர் வரை) 1000 ரூபாயை GST (130 லட்சம் கோடி ரூபாய் / 130 கோடி இந்தியர்கள்) என்று தருகிறார்கள். அதாவது வருடத்திற்கு சுமார் 12000 ரூபாய்.
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
27-ஜூலை-202123:44:34 IST Report Abuse
Rajas கண்கள் இரண்டையும் விற்று விட்டு அதில் வந்த பணத்தை கொண்டு பார்த்து மகிழ சித்திரம் வாங்கிய கதை இவர்களுடையது. பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு போனதற்கு காரணமே பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் தான் என்று கூட புரியாமல் சாலை போட்டேன், மரம் நட்டேன், குட்டை வெட்டினேன் என்று உளறி கொண்டிருக்கிறார்கள். நோபல் பரிசு தினமும் ஒரு லட்சம் பேருக்கு (இந்த கும்பலுக்கு தான்) கொடுக்கப்படும் என்று சொன்னால் கூட இவர்களுக்கு கொடுத்து முடிக்கவே வருடம் பலவாகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X