சட்ட விதிகளை மீறி பார்லி.,க்கு காங்., ராகுல் டிராக்டர் பேரணி

Updated : ஜூலை 28, 2021 | Added : ஜூலை 26, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி :விவசாய சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பார்லிமென்ட் நோக்கி டிராக்டர் பேரணி நடத்தினார், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல். முன் அனுமதி பெறாமல், சட்ட விதிமுறைகளை மீறி ராகுல் பேரணி நடத்தியதாக டில்லி போலீசார் கூறியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட காங்., மூத்த தலைவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச்
பார்லி. ,காங்., ராகுல் டிராக்டர் ,பேரணி சட்ட மீறல், போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் கைது

புதுடில்லி :விவசாய சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பார்லிமென்ட் நோக்கி டிராக்டர் பேரணி நடத்தினார், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்.

முன் அனுமதி பெறாமல், சட்ட விதிமுறைகளை மீறி ராகுல் பேரணி நடத்தியதாக டில்லி போலீசார் கூறியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட காங்., மூத்த தலைவர்கள்

சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் சட்டம், வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டு சட்டம் ஆகிய மூன்று விவசாய சட்டங்களும் பார்லி.,யில் கடந்தாண்டு அமல்படுத்தப்பட்டன.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சில விவசாய சங்கங்கள் போராடி வருகின்றன.

எதிர்க்கட்சிகள் ஆதரவு

டில்லியை ஒட்டியுள்ள மூன்று எல்லைப் பகுதிகளில், கடந்தாண்டு நவம்பரில் இருந்து இந்த போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.பிரச்னைக்கு தீர்வு காண, விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பல சுற்று பேச்சு நடத்தியது. 'இந்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்' என, விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்தப் போராட்டத்துக்கு, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. காங்., முன்னாள் தலைவர் ராகுல், தொடர்ந்து இந்தப் பிரச்னையை எழுப்பி வருகிறார்.தற்போது நடந்து வரும் பார்லி.,யின் மழைக்கால கூட்டத் தொடரிலும், விவசாய சட்டங்களை முன்வைத்து காங்., அமளியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், ராகுல் உள்ளிட்ட காங்., மூத்த தலைவர்கள் பார்லி., நோக்கி நேற்று காலை டிராக்டர் பேரணி நடத்தினர். அதில் ஒரு டிராக்டரை ராகுல் ஓட்டிச் சென்றார். அவருடன் கட்சியின் பல மூத்த தலைவர்களும் பங்கேற்றனர்.இந்தப் போராட்டத்தின்போது ராகுல் பேசியதாவது:

இந்த டிராக்டர் பேரணி வாயிலாக விவசாயிகளின் செய்தியை பார்லி.,க்கு தெரிவிக்க விரும்புகிறேன். விவசாயிகளின் குரலை மத்திய அரசு ஒடுக்குகிறது. பார்லி.,யிலும் இந்தப் பிரச்னையை விவாதிக்க அனுமதிப்பது இல்லை.இந்த சட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். இந்த சட்டங்கள், சில தொழிலதிபர்களுக்கே பலனளிக்கக் கூடியது என்பதை இந்த நாடு அறியும்.மத்திய அரசைப் பொறுத்தவரை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை பயங்கரவாதிகள் என்கிறது. ஆனால், விவசாயிகளின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதுஎன்பதே உண்மை.

விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்பட்டால், பார்லி., வளாகத்தில் டிராக்டர்களை இயக்க நேரிடும்.இவ்வாறு அவர் பேசினார்.''அரசியல் செய்வதற்காக, விவசாயிகளை ஒரு ஆயுதமாக ராகுல் பயன்படுத்துகிறார். சட்டத்தில் உள்ள பிரச்னைகளை தெரிவித்தால் பேசத் தயார் என, மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், விவசாயிகள் அதற்கு தயாராக இல்லை,'' என, பா.ஜ., - எம்.பி., வினய் சகஸ்ரபூதே கூறியுள்ளார்.
சட்ட மீறல்முன் அனுமதி பெறாமல் சட்ட விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக, காங்., மூத்த தலைவர்கள் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, திபீந்தர் சிங் ஹூடா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, போலீசாரால் அழைத்து செல்லப்பட்டனர். இது குறித்து டில்லி போலீசார் கூறியுள்ளதாவது:பார்லி., கூட்டத் தொடர் நடப்பதால், அதை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டத்தை மீறி டிராக்டர் பேரணி நடத்திஉள்ளனர்.போராட்டம், பேரணி நடத்துவது தொடர்பாக, எந்த முன் அனுமதியையும் பெறவில்லை. இந்தப் போராட்டம், பாதுகாப்பு விதிகளை மீறி நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு போலீசார் கூறியுள்ளனர்.''எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். விவசாயிகள் நலனுக்கு எப்போதும் ஆதரவாக இருப்போம்; ஜாமின் கேட்க மாட்டோம்,'' என, சுர்ஜேவாலா கூறினார்.


பெண்கள் பங்கேற்புவிவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லி எல்லையில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பார்லி., கூட்டத் தொடர் நடக்கும் நிலையில், டில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டனர்.
அதன்படி தினமும் 200 பேர் போராட்டத்தில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தை, 'விவசாய பார்லி.,' என்ற பெயரில் விவசாய சங்கத்தினர் நடத்தி வருகின்றனர்.நேற்று நடந்த விவசாய பார்லி.,யில், 200 பெண்கள் பங்கேற்றனர். விவசாய சட்டங்கள் தொடர்பாக, அதில் விவாதம் நடத்தப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ram - mayiladuthurai,இந்தியா
27-ஜூலை-202111:43:17 IST Report Abuse
ram அடுத்த சட்டசபை தேர்தல்கள் முடியும்வரை இந்த மாதிரி கோமாளித்தனங்கள் நடக்கும்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
27-ஜூலை-202110:00:50 IST Report Abuse
sankaseshan இவங்க கூட்டம் என்றற்க்கு சட்டத்தை மதித்து நடந்திருக்கிறார்கள் தனி சட்டம் இந்த குடும்பத்துக்கு
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
27-ஜூலை-202109:40:24 IST Report Abuse
vbs manian உச்ச நீதிமன்றம் இந்த விவசாயிகள் தரப்பு வாதங்களை கேட்க அழைத்தது. ஆனால் இவர்கள் ஏன் போகவில்லை.யு பி பஞ்சாபி ஹரியானா மாநில விவசாயிகள் மட்டுமே போராட்டத்தில் உள்ளனர். மற்ற மாநிலங்களில் விவசாயி இல்லையா. காங்கிரஸ் இவர்கலை தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் பார்க்கிறது. விவசாயிகளுக்கு கொடுக்கும் மான்யங்களில் அறுபது சதவீதத்துக்கு மேல் பஞ்சாபி யு பி விவசாயி எடுத்து கொள்கிறார். இவர்களுக்கு கொடுக்கும் மானியங்களை அரசு உடனே நிறுத்த வேண்டும். டெல்லி சுற்று புரா பகுதிகளில் காரோண கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. ஒரு முக்கிய காரணம் இந்த அடாவடி கும்பலின் போராட்டம். டெல்லியை கூடாரம் போட்டு நாறடிக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X