பொருளாதார பிரச்னையை சமாளிக்க அதிகளவில் ரூபாய் நோட்டு அச்சடிப்பா?

Updated : ஜூலை 28, 2021 | Added : ஜூலை 26, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி :''பொருளாதார பிரச்னைகளை சமாளிப்பதற்காக அதிக அளவில் ரூபாய் நோட்டுகளை அச்சிடும் திட்டம் எதுவும் இல்லை,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்வட்டமாக தெரிவித்தார்.லோக்சபாவில் நேற்று மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன் கூறியதாவது: பொருளாதார பிரச்னைகளை எதிர்கொள்வதற்காக, அதிக அளவில் ரூபாய் நோட்டுகளை அச்சிடும்
பொருளாதார பிரச்னை, சமாளிக்க அதிகளவ, ரூபாய் நோட்டு அச்சடிப்பா?

புதுடில்லி :''பொருளாதார பிரச்னைகளை சமாளிப்பதற்காக அதிக அளவில் ரூபாய் நோட்டுகளை அச்சிடும் திட்டம் எதுவும் இல்லை,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்வட்டமாக தெரிவித்தார்.லோக்சபாவில் நேற்று மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

பொருளாதார பிரச்னைகளை எதிர்கொள்வதற்காக, அதிக அளவில் ரூபாய் நோட்டுகளை அச்சிடும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை.கடந்த 2020 - 2021ம் நிதியாண்டுக்கான ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், மைனஸ் 7.3 ஆக உள்ளது. நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டு இருக்கும்.

கொரோனா பரவல் மற்றும் பொது முடக்கத்தால் ஏற்பட்டிருந்த பாதிப்பில் இருந்து மிக வேகமாக மீண்டு வருகிறோம். 'ஆத்ம நிர்பர்' எனப்படும் தற்சார்பு இந்தியா திட்டத்தின் வாயிலாக பல சலுகைகள், வாய்ப்புகள் தரப்பட்டுள்ளதால் தொழில் துறைகள் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-ஜூலை-202123:45:23 IST Report Abuse
அப்புசாமி 1972 ம் ஆண்டு ஆகஸ்டு மாசம் 15ம் நாள் அமெரிக்க அதிபர் ரிச்சர்டு நிக்சன் அமெரிக்க டாலருக்கும் தங்கத்துக்கும் இடையே உள்ள உறவை துண்டித்தார். அப்போ ஏற ஆரம்பித்த தங்கத்தின் விலை இன்றும் தொடர்கிறது. அதை பின்பற்றி உலகநாடுகள் அமெரிக்காவை பின்பற்றி கரன்சி நோட்டுகளை அடிக்க ஆரம்பித்தன. விலைவாசி ஏறும் போதெல்லாம் புது கரன்சிகள் அச்சடிக்கப்படும். இல்லையென்றால் நம்ம அரசு மாதிரி பெட்ரோல் விலை , ரயில் கட்டணம்னு ஏத்தி மக்களை கசக்கி புழியுவாங்க. அப்புறம் கரன்சி அடிப்பாங்க. கடைசியில் காணாம பூடுவாங்க.
Rate this:
Ganapathy Subramanian - Muscat,ஓமன்
29-ஜூலை-202108:26:48 IST Report Abuse
 Ganapathy Subramanian"இல்லையென்றால் நம்ம அரசு மாதிரி பெட்ரோல் விலை, ரயில் கட்டணம்னு ஏத்தி மக்களை கசக்கி புழியுவாங்க. அப்புறம் கரன்சி அடிப்பாங்க." - அப்புசாமி, நீங்க தப்புசாமி. ரயில்கட்டணம் ஏறியிருக்கிறதா என்ன?...
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
27-ஜூலை-202123:25:17 IST Report Abuse
Rajas இவர்களுக்கு இந்த அளவிற்கு எல்லாம் பொருளாதார விஷயம் தெரிந்திருக்காது. பணம் அதிக அளவில் அடித்தால் எல்லோரும் பணக்காரர்கள் ஆகி விடுவார்கள் என்று பணம் அடிக்க சொல்லி குதித்திருப்பார்கள். யாரோ விஷயம் தெரிந்த ஒரு அதிகாரி இதற்க்கு ஒப்பு கொள்ளாமல் இருந்திருப்பார்.
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
27-ஜூலை-202123:20:35 IST Report Abuse
Rajas இவர்கள் ஆட்சியில் இருக்கும் திறன் படைத்த மந்திரிகள் மற்றும் அவர்களின் கீழே இருக்கும் அதிகாரிகளை சரியாக கவனிக்க வேண்டும். ரூபாய் நோட்டு அச்சடிக்கிறேன் என்று பழைய 1000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து விட போகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X