அரசியல் செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி கேட்பதற்காகவே டில்லி வந்தோம்: பழனிசாமி பேட்டி

Updated : ஜூலை 28, 2021 | Added : ஜூலை 26, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
''தமிழகத்துக்கு போதிய அளவு கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கவும், சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்கு பிரசாரம்செய்ததற்காக நன்றி தெரிவிக்கவும், பிரதமர் மோடியை சந்தித்தோம்,'' என, அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தெரிவித்தார். நன்றி தெரிவித்தோம்அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர்
தடுப்பூசி கேட்க, டில்லி வந்தோம் , பழனிசாமி பேட்டி

''தமிழகத்துக்கு போதிய அளவு கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கவும், சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்கு பிரசாரம்செய்ததற்காக நன்றி தெரிவிக்கவும், பிரதமர் மோடியை சந்தித்தோம்,'' என, அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தெரிவித்தார்.


நன்றி தெரிவித்தோம்



அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் நேற்று முன்தினம் தனித்தனியே டில்லி வந்தனர்.தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த இருவரும், நேற்று காலையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க பார்லிமென்டிற்கு வந்தனர். இவர்களுடன் வேலுமணி, மனோஜ் பாண்டியன்மற்றும் தளவாய்சுந்தரம்ஆகியோர் மற்றும் எம்.பி.,க்கள், தம்பிதுரை, நவநீதகிருஷ்ணன், ரவீந்திரநாத் ஆகியோரும் வந்திருந்தனர்.

பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள பிரதமரின்அலுவலகத்தில் 20 நிமிடங்களுக்கு மேலாக இந்தச் சந்திப்பு நீடித்தது.இதன்பின் தமிழ்நாடு இல்லம் திரும்பியதும் நிருபர்களிடம் பழனிசாமி கூறியதாவது:தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலின் போது, அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியை ஆதரித்து, பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். அதற்கு அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம்.கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தேவையான தடுப்பூசிகளை, தமிழகத்திற்கு போதிய அளவு தரும்படி, பிரதமரிடம் நேரில் வலியுறுத்தினோம்.


மேகதாது அணை



மேகதாது அணையை, கர்நாடக அரசு கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி தரக்கூடாது என்பதே எங்கள் நிலை. அதையும் பிரதமரிடமும் வலியுறுத்தினோம். மேகதாது அணை கட்டப்பட்டால், டெல்டா மாவட்டங்கள் பாலைவனம் ஆகிவிடும். தமிழகத்தில், 16 மாவட்டங்கள் காவிரி நீரை குடிநீர் ஆதாரமாக கொண்டுஉள்ளன.எனவே, இந்த விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தி, மேகதாது அணை கட்டும் எந்த நடவடிக்கைக்கும், மத்திய அரசு துணை போக கூடாது என, பிரதமரிடம் வலியுறுத்தினோம். நீர் பற்றாக்குறை மாநிலமாக தமிழகம் உள்ளது. அதை போக்குவதற்கும், குடிநீர் பிரச்னையை தீர்க்கவும், கோதாவரி - காவிரி நதி நீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும்படி கூறினோம்.

தமிழக்தில், அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் சாலைகளை விரிவுபடுத்தவும், மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.அவற்றை தேசிய நெடுஞ்சாலை ஆணையம்விரைந்து நிறைவேற்ற வேண்டுமென முறையிட்டோம். இலங்கை கடற்படையால், தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர்.


கட்டுக்கோப்பு



தமிழக மீனவர்களின் வலைகளை பறித்துச் செல்வது, படகுகளை சேதப்படுத்துவது அடிக்கடி நடக்கிறது; இதை தடுத்து நிறுத்தும்படியும் பிரதமரிடம் வலியுறுத்தினோம். சட்டசபை தேர்தலுக்கு பின், கட்சியிலிருந்து சிலர் விலகிச் சென்றுள்ளனர்.தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதால், இவர்கள் விலகிச் சென்றுள்ளனர். வேறு எந்த பிரச்னையும் இல்லை.அ.தி.மு.க., தலைமையின் மீது, எந்த ஒரு தொண்டருக்கும் அதிருப்தி கிடையாது. அப்படியிருந்து இருந்தால், கூட்டணியில் இவ்வளவு அதிகமானோர் வெற்றி பெற்றிருக்க முடியாது. அ.தி.மு.க., கட்டுக்கோப்பான இயக்கம்.

தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் தான் ஆகியுள்ளது. எனவே, இந்த ஆட்சியை பற்றி, உடனடியாக ஒரு முடிவுக்கு வந்து விட முடியாது. தமிழக மக்களுக்கு தேவையான திட்டங்களை, மாநில அரசு பெற வேண்டும்.ஆட்சியில் இருந்தாலும் இல்லா விட்டாலும், தமிழக நலனுக்காக அ.தி.மு.க., பாடுபடும். தமிழகத்திற்கு என்ன நன்மை கிடைக்க வேண்டுமோ, அவற்றை எல்லாம் அ.தி.மு.க., வலியுறுத்தும். பிரதமரிடம் அதைத்தான் கேட்டுள்ளோம்.
லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டு வர, தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக எங்களுக்கு செய்தி கிடைத்தது. அதன் அடிப்படையிலேயே அறிக்கை வெளியிட்டோம். தற்போது, அதை மறுத்துள்ளனர்.லாட்டரியை கொண்டு வராமல் இருந்தால் நல்லது தான்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது டில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
28-ஜூலை-202112:50:26 IST Report Abuse
Visu Iyer கொடநாடு வழக்கு பற்றி பேசி இருக்கணுமே.. ஆறுமுக சாமி விசாரணை கமிஷன் பற்றி நிச்சயம் பேசி இருக்கணுமே... சசிகலா பிரவேசம் பற்றி பேசாமல் இருக்க முடியுமா என்ன.. இதை எல்லாம் செய்தியாளர்களுக்கு முன் சொல்ல தேவையில்லை.. என்ன பேசினார்கள் என்பது இங்கே பதிவாகி உள்ளது.
Rate this:
Cancel
T.sthivinayagam - agartala,இந்தியா
27-ஜூலை-202120:46:05 IST Report Abuse
T.sthivinayagam பெண் சிங்கம் மாண்புமிகு முன்னாள் முதல்வர் அமரர் ஜே. ஜெயலலிதா அம்மையார் கட்டிக்காத்த கட்சி . ....மனம் வருந்துகிறது
Rate this:
Cancel
ktkswami - delhi,இந்தியா
27-ஜூலை-202119:02:03 IST Report Abuse
ktkswami Good joke
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
28-ஜூலை-202112:51:06 IST Report Abuse
Visu Iyerஜோக்கர் எல்லாம் பிரதமர் என்று சொல்றீங்களா.... அப்படி தான் என்றாலும் அப்படி சொல்ல கூடாது.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X