அரசியல் செய்தி

தமிழ்நாடு

தொலைநோக்கு திட்டங்கள் முதல்வர் அறிவுறுத்தல்

Updated : ஜூலை 28, 2021 | Added : ஜூலை 26, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை : 'அரசின் நிதி ஒதுக்கீடுகள், அதிகபட்ச மக்களை சென்றடையும் வகையில், தொலைநோக்கு பார்வையுடன், திட்டங்களை செயல்படுத்த வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். சென்னை, தலைமை செயலகத்தில், திட்டம் மற்றும் வளர்ச்சி துறையின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், நேற்று நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். பொருளியல் மற்றும்
 தொலைநோக்கு திட்டங்கள்,  முதல்வர் அறிவுறுத்தல்

சென்னை : 'அரசின் நிதி ஒதுக்கீடுகள், அதிகபட்ச மக்களை சென்றடையும் வகையில், தொலைநோக்கு பார்வையுடன், திட்டங்களை செயல்படுத்த வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

சென்னை, தலைமை செயலகத்தில், திட்டம் மற்றும் வளர்ச்சி துறையின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், நேற்று நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை, மாநில வளர்ச்சி கொள்கை குழு, மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சி துறை ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து, முதல்வர் ஆய்வு செய்தார். கூட்டத்தில் அவர் கூறியதாவது:ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் மேம்படவும், விவசாயிகளுக்கு நலன் அளிக்கவும், தொழில் வளர்ச்சி சிறக்கவும், முறையான திட்டங்களை வகுத்து, அவற்றின் செயல்பாட்டை கண்காணிக்க வேண்டும்.அரசின் நிதி ஒதுக்கீடுகள், அதிகபட்ச மக்களை சென்றடையும் வகையில், தொலைநோக்கு பார்வையுடன், திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.திட்டங்கள் வகுக்கையில், பல்வேறு துறை வல்லுனர்களையும் கலந்தாலோசித்து அவர்கள் கருத்தை பெற்று, திட்டங்களை இறுதி செய்வது, சிறப்பான பலன்களை அளிக்கும்.மாநிலத்திற்கு பிரத்யேகமாக, 'ரியல் டைம் டேட்டா' எனப்படும், நிகழ்தரவு ஒன்றை நிறுவ வேண்டும்.

மாநிலத்தின் முன்னேற்றத்திற்கான தொலைநோக்கு திட்டங்கள், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரையறுக்கப்பட்டு, ஒவ்வோர் ஐந்தாண்டுகளில், ஆண்டு தோறும் ஏற்படும் நிகழ் மாற்றங்களுக்கேற்ப வடிவமைக்கப்பட வேண்டும்.இவ்வாறு முதல்வர் கூறினார்.கூட்டத்தில், அமைச்சர்கள் பெரியசாமி, தியாகராஜன், மாநில வளர்ச்சி கொள்கை குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், தலைமைச் செயலர் இறையன்பு பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
27-ஜூலை-202119:16:21 IST Report Abuse
vbs manian எல்லோருக்கும் தெரிந்த எல்லோரும் விரும்பும் தோலை நோக்கு திட்டம் கோடி லிட்டர் க்கணக்கில் வீணாகி கடலில் கலக்கும் மழை நீர் சேமிப்பு புதிய ஏரிகள் உள்ள ஏரிகளை இணைத்தல் தடுப்பணை கட்டுதல் நீர் நிலைகள் சரியாக தூர் வரி பராமரிப்பு. செய்வார்களா.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
27-ஜூலை-202116:13:11 IST Report Abuse
raja அதிக பட்ச மக்களை என்பதை அதிகபட்ச உடன்பிறப்புகளை சென்றடைய வேண்டும்.... என்பதை நான் சொல்லியா தெரிய வேண்டும்....
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
27-ஜூலை-202109:04:28 IST Report Abuse
duruvasar 34 அமைச்சர்களும் தொலை நோக்கு திட்டங்களை தொடங்கி 3 மாதம் ஆகிவிட்டது. மின் துறையில் வேலைகள் மின்சாரத்தை விட வேகமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். நேருவின் மூன்று பூங்கா திட்டம், வீடுதேடி வரும் இன்சுலின் இன்ப விஷா என களை கட்டிவிட்டதே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X