அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோவில் சொத்தை கோவிலுக்கே கொடுங்கள்!

Updated : ஜூலை 28, 2021 | Added : ஜூலை 26, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
சென்னை :''கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளவர்கள், தாங்களாகவே முன் வந்து, நிலத்தை கோவிலிடமே ஒப்படைக்க வேண்டும்,'' என, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.காஞ்சிபுரம், ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 1,970 சதுரடி வணிக வளாகம், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ளது. இந்த வளாகத்தில், மூன்று கடைகள் நீண்ட காலமாக ஆக்கிரமிப்பில் இருந்தன. அவற்றை,
கோவில் சொத்து, கோவிலுக்கு, அமைச்சர் சேகர்பாபு வேண்டுகோள்

சென்னை :''கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளவர்கள், தாங்களாகவே முன் வந்து, நிலத்தை கோவிலிடமே ஒப்படைக்க வேண்டும்,'' என, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காஞ்சிபுரம், ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 1,970 சதுரடி வணிக வளாகம், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ளது. இந்த வளாகத்தில், மூன்று கடைகள் நீண்ட காலமாக ஆக்கிரமிப்பில் இருந்தன. அவற்றை, அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று மீட்டனர்.அதன்பின் சேகர்பாபு அளித்த பேட்டி: ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான வணிக வளாகத்தில், மூன்று கடைகள், 1954ல், கங்காதரன் என்பவரால் வாடகைக்கு எடுக்கப்பட்டன. அவர் மறைந்த பின், 2014ல் அந்த இடத்தை முறைகேடாக சிலர் ஆக்கிரமித்தனர்.


இதுதொடர்பாக அறநிலையத்துறை சார்பில் அவர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி, விளக்கம் கேட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆக்கிரமிப்பாளர்கள் முறையான விளக்கம் அளிக்கவில்லை. இதையடுத்து, ஆக்கிரமித்து நிலத்தை அறநிலையத்துறை வசம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளது. இந்தக் கோவிலுக்கு சொந்தமான, 140 கிரவுண்டு நிலமும் முழுமையாக மீட்கப்படும்.

கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளவர்கள், தாங்களாகவே முன் வந்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும். இதுவரை, 600 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள், ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. விரைவில் இது, 1,000 கோடியாக உயரும். இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்வில், அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், இணை கமிஷனர் ஜெயராமன், மண்டல உதவி கமிஷனர்கள் கவேனிதா, ஜெயா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


வைப்பு நிதியாகிறது காணிக்கை தங்கம்அமைச்சர் சேகர்பாபு மேலும் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களை புனரமைக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. திருச்செந்துார், சோளிங்கர், மருதமலை உள்ளிட்ட கோவில்களில், தனியார் நிறுவனங்கள்
உதவியுடன், தேவையான வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு, பணிகள் துவக்கப்பட்டுள்ளன.மருதமலை கோவிலில், முதியோர் வசதிக்காக, மின் துாக்கி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், அ.தி.மு.க., ஆட்சியில், 47 கோவில்கள் மட்டுமே, பிரசித்தி பெற்ற கோவில்களாக கருதப்பட்டன. தற்போது, 539 கோவில்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அவற்றை சீரமைத்து மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருத்தணி, சோளிங்கர், திருக்கழுக்குன்றம், திருச்சி, திருச்செங்கோடு கோவில்களில் பக்தர்கள் வசதிக்காக, 'ரோப் கார் வசதி' விரைவில் ஏற்படுத்தப்படும்.கோவில்களுக்கு காணிக்கையாக வந்த, 2,000 கிலோ தங்கம், எவ்வித பயனுமின்றி வைக்கப்பட்டுள்ளது. அவற்றை வைப்பு நிதியாக வைத்து, அதில் வரும் வட்டியை, கோவில் பணிகளுக்கு பயன்படுத்த திட்டமிடப் பட்டு உள்ளது.
தமிழகத்தின் புராதன சிலைகள் இரண்டு அமெரிக்காவிலும், ஒன்று சிங்கப்பூரிலும் உள்ளன. விரைவில், அவை தமிழகம் கொண்டு வரப்படும். அறநிலையத் துறை கோவில்களில் முறையாக கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
27-ஜூலை-202120:41:19 IST Report Abuse
Darmavan அரசு கோயிலை விட்டு வெளியேறட்டும்.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
27-ஜூலை-202117:12:39 IST Report Abuse
S. Narayanan கோவில் சொத்தை ஆக்ரமித்து இருப்பவர்களிடம் இருந்து திமுக வால் திரும்ப பெற முடியவில்லை போலும். அதனால் ஓபன் அறிக்கை விட்டு கோவில் சொத்த திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கூறுகிறார் போலும். ஆக்ரமித்தவர்கள் இத்தனை வருடங்களாக அனுபவித்தவர்கள் திரும்ப கொடுப்பார்களா.
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
27-ஜூலை-202116:10:33 IST Report Abuse
கல்யாணராமன் சு. \\தனியார் நிறுவனங்கள் உதவியுடன், தேவையான வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு, பணிகள் துவக்கப்பட்டுள்ளன.\\ பார்த்து அமைச்சரய்யா, நம்ம தோழர்களும், தோழமை கட்சிகளும், நடிகர்-தோழர்களும், போராளிகளும், நீங்க ரத்தம் உறிஞ்சும் corporate நிறுவனங்களை உதவி கேக்கறீங்கன்னு கோவப்படப் போறாங்க ?? அவங்களையும் ஒரு வார்த்தை கேட்டுடுங்க ........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X