கர்நாடகா முதல்வர் பதவிக்கு அடுத்தது யார்?

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 26, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
பெங்களூரு :கர்நாடகா முதல்வர் பதவியை எடியூரப்பா நேற்று ராஜினாமா செய்தார். புதிய முதல்வராக, அந்த மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த முடிவை, பா.ஜ., மேலிடக் குழு விரைவில் அறிவிக்க உள்ளது. மொத்தம் 224 எம்.எல்.ஏ.,க்கள் உள்ள கர்நாடகா சட்டசபைக்கு, 2018ல் நடந்த தேர்தலில், எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க தேவையான 113
கர்நாடகா முதல்வர் பதவி , அடுத்தது யார்?

பெங்களூரு :கர்நாடகா முதல்வர் பதவியை எடியூரப்பா நேற்று ராஜினாமா செய்தார். புதிய முதல்வராக, அந்த மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்த முடிவை, பா.ஜ., மேலிடக் குழு விரைவில் அறிவிக்க உள்ளது. மொத்தம் 224 எம்.எல்.ஏ.,க்கள் உள்ள கர்நாடகா சட்டசபைக்கு, 2018ல் நடந்த தேர்தலில், எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க தேவையான 113 இடங்கள் கிடைக்கவில்லை. பா.ஜ.,வுக்கு அதிகபட்சமாக 104 இடங்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 80 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 30 இடங்களும் கிடைத்தன.கூட்டணி ஆட்சிஇதனால், குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளமும், காங்கிரசும் இணைந்து, கூட்டணி ஆட்சி அமைத்தன. அந்த ஆட்சி ஓராண்டு கூட நீடிக்கவில்லை. 2019ல் எடியூரப்பா தலைமையில், பா.ஜ., ஆட்சி அமைந்தது. காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளில் இருந்து வந்த 17 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன், எடியூரப்பா தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்தது. அப்போதே எடியூரப்பாவுக்கு 76 வயது. பா.ஜ.,வின் கொள்கை படி, 75 வயதான யாருக்கும் கட்சி அல்லது ஆட்சியில் முக்கிய பதவிகள் வழங்கப்பட மாட்டாது. அந்த கொள்கை முடிவுக்கு எதிராக, எடியூரப்பாவுக்கு பதவி வழங்கப்பட்டது. அப்போதே, 'முதல்வர் பதவி இரண்டாண்டுகளுக்கு மட்டும் தான்' என, அவரிடம் சொல்லப்பட்டது.

இரண்டாண்டு பதவிக்காலம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அதற்கு, ஆறு மாதங்களுக்கு முன்னரே, அவரை பதவியிலிருந்து அகற்ற அதிருப்தியாளர்கள் முயற்சித்தனர். எனினும், அவர்களின் முயற்சி வெற்றி பெறவில்லை.இந்நிலையில், சமீபத்தில் டில்லி சென்ற எடியூரப்பாவிடம், 'இரண்டாண்டு முடியும் போது பதவியிலிருந்து விலகி விடுங்கள்' என, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சியின் தேசிய தலைவர் நட்டா கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
ராஜினாமா கடிதம்இந்த தகவல் அரசல் புரசலாக வெளியே வந்து, 'முதல்வர் எடியூரப்பா விரைவில் ராஜினாமா' என்று பரவியது. ஆனால், பதவியிலிருந்து அவர் விலகக்கூடாது என, வீரசைவ லிங்காயத் சமூக மடாதி பதிகள் பலரும் வலியுறுத்தி வந்தனர்.கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டதன் படி, நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றதால், முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார். பெங்களூரில் உள்ள ராஜ்பவன் சென்று, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்; கவர்னரும் அதை ஏற்றார். புதிய முதல்வர் தலைமையில் அரசு அமையும் வரை, காபந்து முதல்வராக தொடருமாறு கவர்னர் கேட்டுக் கொண்டார்; அதை எடியூரப்பாவும் ஏற்றார்.


கவர்னர் பதவி வேண்டாம்ராஜ்பவனிலிருந்து வெளியே வந்த பின் எடியூரப்பா கூறியதாவது:கட்சி கொள்கை முடிவை மீறி, 75 வயது நிரம்பிய என்னை முதல்வராக்கிய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.என்னை ஏழு முறை எம்.எல்.ஏ.,வாக்கி, முதல்வர் என்ற உயர்ந்த பதவியில் அமர வைத்த என் சொந்த தொகுதியான, ஷிகாரிபுரா மக்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.என்னை ராஜினாமா செய்யும்படி, கட்சி மேலிடம் உத்தரவிடவில்லை. மற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில், சுயமாகவே பதவியை ராஜினாமா செய்தேன்.

நான்கு முறை என்னை முதல்வராக்கிய மக்களுக்கு நன்றி.தொடர்ந்து அரசியலில் நீடிப்பேன். மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து, அடுத்த முறையும் பா.ஜ.,வை ஆட்சியில் அமர வைப்பேன். கவர்னர் பதவி வேண்டாம் என்று கூறியுள்ளேன்.அடுத்த முதல்வராக யாரை தேர்வு செய்யலாம் என்று பரிந்துரைக்கவில்லை. என்னை கேட்டாலும் பரிந்துரைக்க மாட்டேன். எனக்கு ஆதரவாக செயல்பட்ட மடாதிபதிகள், கட்சி தொண்டர்களுக்கு நன்றி.இவ்வாறு அவர் கூறினார்.
பெயர் அறிவிப்புமுதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா விலகியதால், அடுத்தது யார் என்ற கேள்வி கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எழுந்துள்ளது.தற்போதைய நிலையில், மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, 58, தான், புதிய முதல்வராக நியமிக்கப்படுவார் என, பலமாக எதிர்பார்க்கப்படுகிறது. அந்த மாநிலத்தின் இரு பெரும் சமுதாயங்களான லிங்காயத், ஒக்கலிகாவைச் சாராத, பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த அவரை, முதல்வராக நியமிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.அதே நேரத்தில், லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த முருகேஷ் நிரானி, ஒக்கலிகா சமுதாயத்தைச் சேர்ந்த சி.டி.ரவி ஆகியோருக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.எனினும், புதிய முதல்வரை டில்லியில் பா.ஜ., மேலிடக் குழு முடிவு செய்யும். வரும் வியாழக்கிழமை, புதிய முதல்வர் பெயர் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
27-ஜூலை-202114:29:15 IST Report Abuse
அசோக்ராஜ் ராமகிஷ்ண ஹெக்டே ஆகட்டும். சக்கரவர்த்தி ராஜாஜி ஆகட்டும். பிரஹலாத் ஜோஷி ஆகட்டும். ஏனைய சாதியினர் அடித்துக் கொண்டால்தான் இந்த சாதியினருக்கு பதவி.
Rate this:
Cancel
ars -  ( Posted via: Dinamalar Android App )
27-ஜூலை-202111:59:23 IST Report Abuse
ars எடியூரப்பாவுக்கு 78, பதவி இரங்கணும். பக்கத்துல கேரளாவில் 89 வயது மெட்ரோ ஸ்ரீதர் முதல்வர் வேட்பாளராக முன்னிருத்தப்பட்டரே.
Rate this:
Kanthan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா
27-ஜூலை-202118:02:32 IST Report Abuse
Kanthan Iyengaar.கேரளாவில் பி ஜெ பி எவ்வளவு அடிமட்டத்தில் இருக்கு ? இவா கட்சியே அடிமட்டத்தில் இருந்து தொண்டரா, அவா கட்சி கொள்கை பிடிப்போடு வேலை செய்து முன்னேறிய ஆளுக்கு பஞ்சமோ பஞ்சம். திறமை இல்லாத கட்சி.....
Rate this:
Ramani T S - chennai,இந்தியா
28-ஜூலை-202111:08:54 IST Report Abuse
Ramani T Sஅடுத்த போலி ஐயங்கார்...
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
27-ஜூலை-202111:38:34 IST Report Abuse
Duruvesan Moorkan motham Hindu peyaril
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X