அரசியல் செய்தி

தமிழ்நாடு

'வன்னியர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்' ; ராமதாஸ்

Added : ஜூலை 26, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை : 'பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளின் மாணவர் சேர்க்கையில், வன்னியர் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை:தமிழகத்தில், பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான 'ஆன்லைன்' விண்ணப்ப நடைமுறை நேற்று துவங்கியது. அதில் வன்னியர்களுக்கான, 10.5 சதவீத உள்
 'வன்னியர் இட ஒதுக்கீட்டை  அமல்படுத்த வேண்டும்' ; ராமதாஸ்

சென்னை : 'பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளின் மாணவர் சேர்க்கையில், வன்னியர் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:தமிழகத்தில், பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான 'ஆன்லைன்' விண்ணப்ப நடைமுறை நேற்று துவங்கியது. அதில் வன்னியர்களுக்கான, 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு குறித்து, எந்த அறிவிப்பும் இடம் பெறாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது; இது, கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள பொறியியல் மாணவர் சேர்க்கை; தமிழ்நாடு கல்லுாரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளின் மாணவர் சேர்க்கைக்கான விபரக்குறிப்பில், இட ஒதுக்கீட்டு குறித்த தகவல் இடம் பெறவில்லை.

ஒவ்வோர் இடஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்களுக்கான தகுதி மதிப்பெண் குறித்த விவரங்களிலும், வன்னியர் உள் இடஒதுக்கீடு பற்றி குறிப்பிடப்படவில்லை. ஆன்லைன் விண்ணப்பத்திலும், வன்னியர் உள் இடஒதுக்கீட்டு பிரிவு இடம் பெறவில்லை. இவையெல்லாம் முதல்வர் ஸ்டாலினுக்கு தெரிந்து நடைபெறுகிறதா என்றும் தெரியவில்லை.வன்னியர் இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது அநீதி; ஏற்க முடியாது. எனவே, சமூக நீதிக்கு எதிரான மாணவர் சேர்க்கை அறிவிக்கையை உடனே திரும்ப பெற வேண்டும். அதற்கு மாற்றாக, வன்னியர் இட ஒதுக்கீட்டை உள்ளடக்கிய புதிய அறிவிக்கைகயை, அரசு வெளியிட வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அன்பு - தஞ்சை,கனடா
28-ஜூலை-202100:25:19 IST Report Abuse
அன்பு சின்ன மற்றும் பெரிய மாங்காவையும் ஜெயிலில் போடுங்க சார்.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
27-ஜூலை-202119:18:01 IST Report Abuse
vbs manian ஐயா மற்ற சமூகத்தினரை பற்றியும் கொஞ்சம் நினையுங்கள்.
Rate this:
Cancel
Mani Pangan - Obajana,நைஜீரியா
27-ஜூலை-202118:23:42 IST Report Abuse
Mani Pangan தேர்தலில் நின்ற தி.மு.க வேட்பாளர்களின் பட்டியலை பாருங்கள்... பா.ம.க வை விட அதிக வன்னியர்கள் தி.மு.க கட்சியில் தான் இருக்கிறார்கள். ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்களையும் (இரட்டை அர்த்தம் இல்லை) அடித்து இருக்கிறார் முதல்வர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X