ககன்யான் முன்னோட்டம் தாமதமாகிறது: இஸ்ரோ| Dinamalar

'ககன்யான்' முன்னோட்டம் தாமதமாகிறது: இஸ்ரோ

Updated : ஜூலை 28, 2021 | Added : ஜூலை 26, 2021
Share
பெங்களூரு : ''விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும், 'ககன்யான்' திட்டத்தின் முன்னோட்டமாக ஆளில்லா விண்கலத்தை டிசம்பரில் அனுப்புவதற்கு வாய்ப்பு இல்லை,'' என, 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். விண்வெளி ஆய்வில் புதிய சாதனைகளை படைத்து வரும் இஸ்ரோ, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
 'ககன்யான்' முன்னோட்டம் தாமதம்,: இஸ்ரோ

பெங்களூரு : ''விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும், 'ககன்யான்' திட்டத்தின் முன்னோட்டமாக ஆளில்லா விண்கலத்தை டிசம்பரில் அனுப்புவதற்கு வாய்ப்பு இல்லை,'' என, 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

விண்வெளி ஆய்வில் புதிய சாதனைகளை படைத்து வரும் இஸ்ரோ, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. ககன்யான் என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம், 10 ஆயிரம் கோடி ரூபாயில் செயல்படுத்தப்படுகிறது.அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்ததாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்த திட்டத்தின்படி, நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் 2022ல் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்த பயணத்துக்கு முன், இரண்டு முறை ஆளில்லா விண்கலத்தை முன்னோட்டமாக அனுப்பும் திட்டம் உள்ளது.

முதல் முன்னோட்ட பயணம் டிசம்பரில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளதாவது:கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ககன்யான் திட்டத்துக்கான மென்பொருள் கிடைப்பது தாமதமாகியுள்ளது. அதனால் டிசம்பரில் முதல் முன்னோட்ட பயணம் நிச்சயம் இருக்காது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X