பிரசாந்த் கிஷோர் குழுவினர் திரிபுராவில் சிறை வைப்பு

Updated : ஜூலை 26, 2021 | Added : ஜூலை 26, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
கோல்கட்டா :திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்காக திரிபுராவில் கள ஆய்வு மேற்கொள்ள சென்ற பிரசாந்த் கிஷோர் குழுவினரை, போலீசார் ஓட்டலில் சிறை வைத்தனர்.திரிபுராவில் முதல்வர் பிப்லப் குமார் தேவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., கட்சிக்கு மக்கள் ஆதரவு எவ்வாறு உள்ளது என்பதை அறிய, அரசியல் வியூக ஆலோசகர் பிரசாந்த்
பிரசாந்த் கிஷோர் குழுவினர் திரிபுராவில் சிறை வைப்பு

கோல்கட்டா :திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்காக திரிபுராவில் கள ஆய்வு மேற்கொள்ள சென்ற பிரசாந்த் கிஷோர் குழுவினரை, போலீசார் ஓட்டலில் சிறை வைத்தனர்.

திரிபுராவில் முதல்வர் பிப்லப் குமார் தேவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., கட்சிக்கு மக்கள் ஆதரவு எவ்வாறு உள்ளது என்பதை அறிய, அரசியல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோருக்கு சொந்தமான 'ஐபேக்' நிறுவன ஊழியர்கள் 22 பேர் நேற்று திரிபுரா வந்தனர்.

திரிணமுல் காங்.,குக்கு 2026 வரை அரசியல் வியூகங்களை வகுத்து தர, பிரசாந்த் கிஷோர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.


latest tamil news
இந்நிலையில், இன்று (ஜூலை26) காலை அகர்தலா வந்த 22 ஊழியர்களையும், ஓட்டலை விட்டு வெளியேற போலீசார் அனுமதிக்கவில்லை' என, அவர்கள் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து திரிபுராவைச் சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி மாணிக் தாஸ் கூறியதாவது:கொரோனா தடுப்பு விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், புதிதாக 22 பேர் அகர்தலாவில் சுற்றி திரிவதாக தகவல் வந்தது.அவர்கள் எதற்காக வந்துள்ளனர் என விசாரித்தோம். இது வழக்கமான நடைமுறை தான். அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது; முடிவுகளுக்காக காத்து
இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - COIMBATORE,இந்தியா
27-ஜூலை-202112:30:19 IST Report Abuse
Mohan சபாஷ் இவுனுகளே அப்பிடியே அடிச்சு பர்மா நாட்டுக்கு பார்சல் பண்ணிருங்க...இவன் இருந்தா எல்லா தேச துரோகியையும் ஆட்சிக்கு கொண்டு வந்துருவான்...
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
27-ஜூலை-202111:18:12 IST Report Abuse
raja பொய்யான செய்திகளை ,புரளியை மக்களிடையே நம்பும்மாறு பரப்பும் PK கூட்டம் கைது செய்யப்படவேண்டிய கூட்டம்தான்....
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
27-ஜூலை-202111:15:21 IST Report Abuse
sridhar For spreading lies and corrupting people's minds he is being paid by political பார்ட்டிஸ். கேவல அரசியலை மேலும் கேவலமாக்கி மக்களின் அறியாமையை வாக்குகளாக மாற்றி தவறானவர்களை ஆட்சியில் அமரவைப்பது கௌரவமான தொழில் அல்ல , சகுனி தொழில் . தமிழகம் , மேற்கு வங்கம் சீரழிந்தது போதும் , இது தடுக்கப்பட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X