பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் பரவலாக மழை

Updated : ஜூலை 26, 2021 | Added : ஜூலை 26, 2021
Share
Advertisement
சென்னை : தென்மேற்கு பருவகாற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து அம்மையம் கூறுகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன்


சென்னை : தென்மேற்கு பருவகாற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



latest tamil news



இது குறித்து அம்மையம் கூறுகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து (26-07-2021 முதல் 30-07-2021) வரையாக 5 நாட்களுக்கு மிதமாக அல்லது கனமழை பெய்யும். கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யலாம். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். தமிழகத்தின் உள் மற்றும் கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.


latest tamil news



சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் குறைந்த பட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசாகவும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியசாகவும் இருக்கும். மேலும் மன்னார் வளைகுடா, வங்க கடலின் சில பகுதிகள் மற்றும் அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று சென்னையில் ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அண்ணாசாலை, மாதவரம், கொடுங்கையூர், வியாசர்பாடி, பெரம்பூர் மற்றும் புழல் ஆகிய நகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரமாக பலத்த மழை பெய்தது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X