இஸ்ரோ உளவு விவகாரம் ; சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு| Dinamalar

'இஸ்ரோ' உளவு விவகாரம் ; சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (6)
Share
புதுடில்லி : 'இஸ்ரோ' முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது உளவு பார்த்ததாக பொய் வழக்கு தொடர்ந்த போலீஸ் அதிகாரிகள் மீதான வழக்கில், விசாரணைக் குழுவின் அறிக்கையை நம்பியிராமல், விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி சி.பி.ஐ.,க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 1994 இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அலுவலகம் அருகே ராக்கெட் தொடர்பான


புதுடில்லி : 'இஸ்ரோ' முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது உளவு பார்த்ததாக பொய் வழக்கு தொடர்ந்த போலீஸ் அதிகாரிகள் மீதான வழக்கில், விசாரணைக் குழுவின் அறிக்கையை நம்பியிராமல், விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி சி.பி.ஐ.,க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



latest tamil news




கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 1994 இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அலுவலகம் அருகே ராக்கெட் தொடர்பான முக்கிய ஆவணங்களுடன் மாலத்தீவுகளைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். நம் அண்டை நாடான பாக்.,க்காக உளவு பார்த்ததாக இஸ்ரோவில் இயக்குனராக பணியாற்றி வந்த நம்பி நாராயணன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.


latest tamil news




சி.பி.ஐ., நடத்திய விசாரணையில் உளவு பார்த்த விவகாரத்தில் நம்பி நாராயணன் உள்ளிட்டோருக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பது தெரியவந்தது. மூத்த போலீஸ் அதிகாரிகள் சிலர் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி பொய் வழக்கு தொடர்ந்த தாகவும், விசாரணையில் தெரிய வந்தது.நம்பி நாராயணன் தொடர்ந்த வழக்கில் அவருக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


latest tamil news




பொய் வழக்கு தொடர்ந்த போலீஸ் அதிகாரிகள் குறித்து விசாரிக்க முன்னாள் நீதிபதி, டி.கே. ஜெயின் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.போலீஸ் அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரிக்கும்படி, சி.பி.ஐ.,க்கும் உத்தரவிடப்பட்டது.இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:போலீஸ் அதிகாரிகள் அத்துமீறல் தொடர்பாக, நீதிபதி, டி.கே. ஜெயின் குழு அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில், சி.பி.ஐ., விசாரிக்கக் கூடாது. அந்த அறிக்கைக்காக காத்திராமல் சுதந்திரமாக விசாரணை நடத்தி, தகுந்த ஆதாரங்களுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X