பெயரளவுக்கு துவங்கப்பட்ட ஜெ., பல்கலை - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பெயரளவுக்கு துவங்கப்பட்ட ஜெ., பல்கலை'

Updated : ஜூலை 28, 2021 | Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (3)
Share
சென்னை : ''கல்லுாரிகள் திறப்பு குறித்து, முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்,'' என, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:ஆசிரியர் கல்வியியல் படிப்புகள், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகள் வழியாக நடத்தப்படுகின்றன.நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், முன்னாள் நீதிபதி வெங்கட்ராமன் குழு, 'கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்.,
'பெயரளவு , ஜெ., பல்கலை'

சென்னை : ''கல்லுாரிகள் திறப்பு குறித்து, முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்,'' என, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:ஆசிரியர் கல்வியியல் படிப்புகள், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகள் வழியாக நடத்தப்படுகின்றன.நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், முன்னாள் நீதிபதி வெங்கட்ராமன் குழு, 'கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., படிப்புக்கு, 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கக் கூடாது' என, தெரிவித்திருந்தது.


நான்கு பேர் மட்டும்



பி.எட்., கல்வியை பொறுத்தவரை, ஆண்டு கல்விக் கட்டணம் 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடாது என, உத்தரவிட்டுள்ளோம். இதற்கு உட்பட்டு, தனியார் கல்லுாரிகள் செயல்பட வேண்டும். பொறியியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் பெறும் பணி துவக்கப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் 24ம் தேதி வரை விண்ணப்பம் அளிக்கலாம்.
அரசு கலை கல்லுாரிகளில், நேற்று விண்ணப்பம் பெறும் பணி துவங்கியது. அடுத்த மாதம் 10ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கலாம். 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்; நேரடியாகவும் கொடுக்கலாம். ஜெயலலிதா பல்கலை பெயரளவுக்கு துவக்கப்பட்டது. ஒரு ரூபாய் கூட, பட்ஜெட்டில் ஒதுக்கவில்லை. ஒரு துணை வேந்தர், உதவியாளர், டிரைவர், காவலாளி என, நான்கு பேர் மட்டும் பணியில் உள்ளனர்.

பெயர் வைக்க வேண்டும் என்பதற்காக, அந்த பல்கலை துவக்கப்பட்டது. அங்குள்ள மாணவர்களுக்கு, அண்ணாமலை பல்கலையுடன் இணைவதில் எந்த சங்கடமும் இல்லை.உயர் கல்வித் துறையில், கடந்த காலங்களில், பல்வேறு விதிகள் பின்பற்றப்படவில்லை என, புகார்கள் வந்துள்ளன. அவற்றை விசாரிக்க, குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எம்.எல்.ஏ., தங்கை, திறந்தநிலை பல்கலை துணை வேந்தராக இருந்தார். அவர் மீதும் புகார்கள் வந்து, விசாரணையில் உள்ளது. விரைவில், இதற்கான முடிவு கிடைக்கும்.சர்ச்சைக்குரிய பாடங்கள் நீக்கப்பட்டு, புதிய பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.


'ஒன்றிய அரசு'



உயர் கல்வி பாடப் புத்தகங்களில், 'மத்திய அரசு' என்பது மாற்றப்பட்டு, 'ஒன்றிய அரசு' என்ற வார்த்தை இடம்பெறும்.கல்லுாரிகள் திறப்பு குறித்து, இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. அனைத்து துறைகளுடன் கலந்தாலோசித்து, முதல்வர் முன்னிலையில் முடிவு எடுக்க வேண்டும்.கொரோனா தொற்று குறைந்த பின், முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X