சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் 'டிரான்ஸ்பர்'

Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
கோவை : வாகன ஓட்டியிடம் போக்குவரத்து பெண் போலீஸ் லஞ்சம் வாங்கும், 'வீடியோ' சமூக வலைதளங்களில் வெளியானதால், அவரை ஆயுதப்படைக்கு மாற்றி கமிஷனர் உத்தரவிட்டார். கோவை, பெரிய கடைவீதி போலீஸ் ஸ்டேஷனில், போக்குவரத்து பிரிவில் போலீசாக பணியாற்றி வருபவர் பாப்பாத்தி, 40. இவர் கடந்த சில நாட்களுக்கு முன், பெரிய கடைவீதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட டி.கே., மார்க்கெட் பகுதியில் பணியில்
 லஞ்சம் வாங்கிய பெண்  போலீஸ் 'டிரான்ஸ்பர்'

கோவை : வாகன ஓட்டியிடம் போக்குவரத்து பெண் போலீஸ் லஞ்சம் வாங்கும், 'வீடியோ' சமூக வலைதளங்களில் வெளியானதால், அவரை ஆயுதப்படைக்கு மாற்றி கமிஷனர் உத்தரவிட்டார்.

கோவை, பெரிய கடைவீதி போலீஸ் ஸ்டேஷனில், போக்குவரத்து பிரிவில் போலீசாக பணியாற்றி வருபவர் பாப்பாத்தி, 40. இவர் கடந்த சில நாட்களுக்கு முன், பெரிய கடைவீதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட டி.கே., மார்க்கெட் பகுதியில் பணியில் இருந்தார். அப்போது, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளை நிறுத்தி ஆவணங்களை சோதனையிட்டார். ஆவணம் இல்லாத வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கியுள்ளார்.இதை, ஒருவர் மொபைல் போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

இந்த காட்சிகள் போலீஸ் அதிகாரிகளின் கவனத்துக்கு சென்றன. விசாரணையில், அவர் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பெண் போலீசை ஆயுதப்படைக்கு மாற்றி, மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
28-ஜூலை-202104:33:34 IST Report Abuse
meenakshisundaram இந்த 'ஆயுதப்படை' மாற்றம் நா என்ன?திமுக பிரமுகரை சில வாரங்களுக்கு சட்டப்படி டீல் செய்த நல்ல காவல் துறை அதிகாரியும் ஆயுதப்படைக்கு உடனே மாற்றம் ,இப்போது லஞ்சம் வாங்கிய பெண் காவல் துறை அதிகாரியும் அங்கே மாற்றம் முக சொன்னது -காவல் துரையின் 'ஈரல் 'அழுகி விட்டது ?
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
27-ஜூலை-202116:17:43 IST Report Abuse
 Muruga Vel நான் அவசரத்தில் சிகப்பு விளக்கில் சாலையை கடந்து டிராபிக் போலீஸ் சலான் புக்க கையில் வைத்துக்கொண்டு அதில் இருக்கும் இடைஞ்சல்களையும் எனக்கு ஆகும் நேர விரயத்தையும் விளக்கி ரெண்டு பேருக்குமே சவுகரியமாக செட்டில் பண்ண அட்வைஸ் பண்ணினார்
Rate this:
Cancel
Muthu Kumarasamy - Mettupalayam, Coimbatore Dist.,இந்தியா
27-ஜூலை-202114:12:33 IST Report Abuse
Muthu Kumarasamy லஞ்சம் வாங்கினால் வேலையை விட்டு தூக்க வேண்டும். ஒரு இடத்தில இருந்து மற்ற இடத்திற்கு மாற்றுவதால் லஞ்சம் ஒழிந்து விடாது.
Rate this:
suresh kumar - Salmiyah,குவைத்
27-ஜூலை-202115:14:16 IST Report Abuse
suresh kumarஇந்தியாவில் வேலை செய்ய ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். ஏனென்றால், எவரையும் வேலையில் அமர்த்துவதற்கு, துட்டு குடுத்து ஓட்டு வாங்கிய அரசியல்வாதிக்கு கப்பம் கட்ட வேண்டும். அந்த தொகையையும், மேலதிகாரிகளுக்கான கப்பத்தையும் இப்படித்தான் வசூலிக்க வேண்டும். ஓட்டு போட வாங்கிய கூலியை, இப்படி வட்டியும் முதலுமாக திருப்பி கொடுக்க வைக்கிறார்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X