சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கால்வாய் பாலத்தில் குழி

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, ஆழியாறு புளியங்கண்டியில், பி.ஏ.பி., கால்வாய் பாலத்தில் ஏற்பட்டுள்ள குழியால், வாகன ஓட்டுனர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.பொள்ளாச்சி, புளியங்கண்டி வழியாக ஆழியாறு அணை மற்றும் தோட்டங்களுக்கு செல்லும் வழித்தடம் உள்ளது.இவ்வழித்தடத்தில் ஆழியாறு கால்வாய் செல்வதையடுத்து, வாகனங்கள் செல்வதற்கு வசதியாக பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலத்தில் நடுவே
 கால்வாய் பாலத்தில் குழி

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, ஆழியாறு புளியங்கண்டியில், பி.ஏ.பி., கால்வாய் பாலத்தில் ஏற்பட்டுள்ள குழியால், வாகன ஓட்டுனர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.பொள்ளாச்சி, புளியங்கண்டி வழியாக ஆழியாறு அணை மற்றும் தோட்டங்களுக்கு செல்லும் வழித்தடம் உள்ளது.இவ்வழித்தடத்தில் ஆழியாறு கால்வாய் செல்வதையடுத்து, வாகனங்கள் செல்வதற்கு வசதியாக பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலத்தில் நடுவே குழியாக இருப்பதால் வாகன ஓட்டுனர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.பொதுமக்கள் கூறுகையில், 'புளியங்கண்டி பகுதியில் வசிப்போர், இவ்வழியாக சென்று வருகின்றனர். இந்த பாலத்தில் குழியாக இருப்பதால் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் கவனமின்றி வரும் வாகன ஓட்டுனர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். குழியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X