சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நடிகை யாஷிகா கைதாகிறார் ; ஓட்டுனர் உரிமம் ரத்து?

Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : அதிக வேகத்தில் கார் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்திய, நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. துருவங்கள் பதினாறு உள்ளிட்ட படங்களில் நடித்தவர், யாஷிகா ஆனந்த், 22; தனியார், 'டிவி' சேனல் ஒன்றில் ஒளிபரப்பான, 'பிக்பாஸ் சீசன் - 3'யிலும் பங்கேற்று பிரபலமானார்.இவர், இரு தினங்களுக்கு முன், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், தன் ஆண்

சென்னை : அதிக வேகத்தில் கார் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்திய, நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

துருவங்கள் பதினாறு உள்ளிட்ட படங்களில் நடித்தவர், யாஷிகா ஆனந்த், 22; தனியார், 'டிவி' சேனல் ஒன்றில் ஒளிபரப்பான, 'பிக்பாஸ் சீசன் - 3'யிலும் பங்கேற்று பிரபலமானார்.இவர், இரு தினங்களுக்கு முன், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், தன் ஆண் நண்பர்கள் இருவர் மற்றும் அமெரிக்காவில் மென்பொறியாளராக பணிபுரிந்த தோழி வள்ளிசெட்டி பவானி, 28, என்பவருடன், 'டாடா ஹாரியர்' காரில் அதி வேகமாக பயணித்தார். செங்கல்பட்டு மாவட்டம், சூலேரிக்காடு பகுதியில் சென்ற போது, இவரது கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலை மைய தடுப்பில் மோதி விபத்துக்கு உள்ளானது.

காரின் முன் பக்கத்தில் அமர்ந்திருந்த வள்ளிசெட்டி பவானி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.யாஷிகா, அவரது ஆண் நண்பர்கள் அமீர், 27, சையது, 28 ஆகியோர் படுகாய மடைந்தனர். இவர்கள், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.யாஷிகாவிற்கு இடுப்பு மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது; அதற்கான அறுவை சிகிச்சை முடிந்து, அவர் சுய நினைவுக்கு திரும்பி உள்ளார். அதேபோல, அமீர், சையது ஆகியோரும் சிகிச்சைக்கு பின் தேறியுள்ளனர்.

இந்த விபத்து குறித்து, யாஷிகா மீது, மாமல்லபுரம் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு அருகே, மாமல்லபுரம் - சென்னை வரும் வழியில், கிருஷ்ணன்காரணை என்ற இடத்தில் பதிவாகி உள்ள, 'சிசிடிவி' கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றினர். அதேபோல, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வேகக் கட்டுப்பாட்டு கருவியிலும், 122 கி.மீ., வேகத்தில் யாஷிகா கார் ஓட்டியது பதிவாகி உள்ளது. அதனால், இவரது ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதை ரத்து செய்ய, போலீசார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் முடிவு செய்தனர். போலீசார் கூறுகையில், 'இந்த விபத்து தொடர்பாக, சிகிச்சைக்கு பின் யாஷிகா ஆனந்த் கைது செய்யப்படுவார்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
27-ஜூலை-202109:48:03 IST Report Abuse
Girija குடிக்கலியாம் போதையில் இல்லையாம் வண்டி ரிப்பர் ஆகி ஸ்பீடு பிச்சுகிச்சு அவர் என்ன செய்வார் பாவம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X