மல்லையாவுக்கு எதிராக 'திவால்' உத்தரவு பிறப்பிப்பு

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
லண்டன் : தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக பிரிட்டன் நீதிமன்றம, 'திவால்' உத்தரவை நேற்று பிறப்பித்தது.கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா, 65. இவர் நடத்திய 'கிங் பிஷர் ஏர்லைன்ஸ்' நிறுவனத்திற்காக இந்தியாவைச் சேர்ந்த 13 வங்கிகளில் 9,000 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பினார்.ஐரோப்பிய நாடான பிரிட்டன்

லண்டன் : தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக பிரிட்டன் நீதிமன்றம, 'திவால்' உத்தரவை நேற்று பிறப்பித்தது.



latest tamil news



கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா, 65. இவர் நடத்திய 'கிங் பிஷர் ஏர்லைன்ஸ்' நிறுவனத்திற்காக இந்தியாவைச் சேர்ந்த 13 வங்கிகளில் 9,000 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பினார்.ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் கைது செய்யப்பட்ட விஜய் மல்லையா, ஜாமினில் விடுவிக்கப் பட்டார். அவரை இந்தியா அழைத்து வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.


latest tamil news



இந்நிலையில் விஜய் மல்லையாவுக்கு எதிராக திவால் உத்தரவு பிறப்பிக்கும்படி அவருக்கு கடன் கொடுத்த, 13 வங்கிகள் பிரிட்டன் நீதிமன்றத்தில் மனு செய்தன. விசாரணையின் இறுதியில் மல்லையாவுக்கு எதிராக திவால் உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது.


latest tamil news



இதன் வாயிலாக மல்லையாவின் சொத்துக்களை முடக்கி, கொடுத்த கடன் தொகையை மீட்க, வங்கிகளுக்கு வாயப்பு கிடைத்துள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh kumar - Salmiyah,குவைத்
28-ஜூலை-202110:14:01 IST Report Abuse
suresh kumar 'கிங் பிஷர் ஏர்லைன்ஸ்' ஊழியர்களுக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை தருவார்களா?
Rate this:
Cancel
27-ஜூலை-202114:04:57 IST Report Abuse
மோகனசுந்தரம் கடன் கொடுத்தது காங்கிரஸ் சிதம்பரம், மன்மோகன். மோடி கண்டிப்பா ஆப்படிப்பார் என்றுதானே பயந்து நாட்டை விட்டு ஓடினார்கள்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
27-ஜூலை-202108:19:44 IST Report Abuse
duruvasar இவரை இங்கே கொண்டுவர முடியாமல் இருப்பது ஒரு சிதம்பர ரகசியமாக இருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X